Arutkadalae Varanthara Ithu Samayamae – அருட்கடலே வரந் தர இது சமயமே

பல்லவி
அருட்கடலே, வரந் தர இது சமயமே;
ஐயனே, அருள் தாரும்.
சரணங்கள்
1. சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே,
கரங்களில் தாசனைக் காத்திடும், தேவா. – அருட்
2. பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே,
உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க. – அருட்
3. அன்போடு யேசுவை ஆவியோடு பேச,
இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய. – அருட்
4. திரியேக தேவா, திருச்சபை பெருக,
அறிவுட னாளும் அன்பர் கோனாக. – அருட்
5. அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா,
சந்ததம் வாழ, சபைகளுஞ் செழிக்க. – அருட்

Leave a Comment Cancel Reply

Exit mobile version