கர்த்தருடைய ஆலயத்திற்கு
கர்த்தருடைய ஆலயத்திற்கு (2) போவோம் வாருங்கள் என்று எனக்கு சொன்னபோது மகிழ்ச்சியாய் இருந்தேன் அல்லேலூயா துதி கனம் மகிமை (2) என்னை இரட்சித்த கர்த்தர் இயேசுவுக்கே செலுத்தியே மகிழ்ச்சியாய் இருப்பேன்
கர்த்தருடைய ஆலயத்திற்கு (2) போவோம் வாருங்கள் என்று எனக்கு சொன்னபோது மகிழ்ச்சியாய் இருந்தேன் அல்லேலூயா துதி கனம் மகிமை (2) என்னை இரட்சித்த கர்த்தர் இயேசுவுக்கே செலுத்தியே மகிழ்ச்சியாய் இருப்பேன்
கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே யுத்தங்கள் வந்தும் என் கேடகம் நீரே மேக மீதினில் தேவன் ராஜாவாகவே வேகம் வாருமே அழகு லீலி புஷ்பமே 1. பள்ளத்தாக்கிலே நாங்கள் நடந்த போதிலும் பாசமாகவே எம்மைத் தூக்கி மீட்டீரே காலைதோறுமே தேவ சுத்த கிருபையே பனியைப் போலவே என்றும் வந்து இறங்குதே ஜீவனுள்ள தேவனை சொந்தமாகவே ஏற்றுக்கொண்டதாலே என்றும் செழித்து ஓங்குவோம் – கர்த்தரே 2. கருவில் வளரும்போது தேவன் கண்கள் கண்டதே இருளில் நடக்கும்போது தேவன் ஒளியும்
1. கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது. பல்லவி 2. தேவாதி தேவனைத் துதித்திடுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 3. கர்த்தாதி கர்த்தரைத் துதித்திடுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 4. அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 5. வானங்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 6. தண்ணீர் மேல் பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 7. பெருஞ்சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 8. பகலில்
பல்லவி கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு! சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு! அல்லேலூயா! அல்லேலூயா! (2) சரணங்கள் 1. பாவத்தின் சுமையகற்றி – கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) – கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே – அவர் நிதம் நம்மை நடத்துகின்றார்! எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா
1. கர்த்தாவே! இறங்கும்! ப்ரசன்னமாகுமேன்; மெய்பக்தர் நெஞ்சில் இப்பவும் வந்தனல் மூட்டுமேன் பல்லவி கர்த்தாவே! இறங்கும்! நற்சீரைத் தாருமேன்; மா வல்ல க்ரியை செய்யவும் இந்நேரம் வாருமேன்; 2. கர்த்தாவே! இறங்கும்! நல் மீட்பர் நாமமும் மா சுடர்போல் ப்ரகாசிக்க பேரன்பைக் காட்டவும் – கர்த்தாவே 3. கர்த்தாவே! இறங்கும்! இவ்வருள் வேதத்தை கேட்போரின் நெஞ்சில் பொழியும் தேவானுக்கிரக்கத்தை – கர்த்தாவே 4. கர்த்தாவே! இறங்கும்! பேர் நன்மை செய்யுமேன் விண்மாரி பெய்ய மேன்மையும் உண்டாகும் உமக்கே
பல்லவி கர்த்தாவே என் பெலனே உம்மில் அன்பு கூடுவேன் உத்தமமானதும் வழிதானே சரணங்கள் 1. என் கன்மலையும் என் கோட்டையும் என் ரட்சகரும் என் தேவனும் என் கேடகமும் ரட்சண்யக் கொம்பும் என் உயர்ந்த அடைக்கலமானவர் – கர்த்தாவே 2. மரணக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது துர்ச்சன ப்ரவாகம் பயப்படுத்தினது பாதாளக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது மரணக் கண்ணிகளென் மேல் விழுந்தது – கர்த்தாவே 3. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார் பாதங்களின் கீழ் இருள் இருந்தது கேரூபீன்
கருணைக் கடலாம் – இயேசுவே கனிவுடனே இப்போ – இறங்கிடுமே – எங்கள் சரணங்கள் 1. வாரும் வல்லமையாய்த் தாரும் வரங்களை வர்த்திக்க வேணும் விஸ்வா-சத்தை புகழ்ந்திடவே திரு நா-மத்தை-எங்கள் – கருணை 2. தாரக மற்ற தரணி யோரை தாமத மின்றியே மீட்டிட எழுந்திடுமே இந்நே-ரமே- எங்கள் – கருணை 3. அப்போஸ்தலர் காலம் போல அற்புதங்கள் அடையாளங்கள் அதிசய நாமத்தில் ஓங்-கிட-எங்கள் – கருணை 4. முடவர் குதிக்க ஊமை துதிக்க செவிடர் குருடர்
கல்லறைக் காவலில் காயமுடன் கடும் அசுத்தாவி பிடித்தோனவன் கனிவுடன் இயேசுவைப் பணிந்து நின்றான் 1. விலங் கொடிக்கும் கொடும் லேகியோனவன் – இனி வேதனை வேண்டாமென்றான் விரட்டும் எம்மை பன்றிகளுள் என்றன் பேய்களுமே – கல்லறை 2. கட்டளை பெற்று பன்றிக் கூட்டத்துள் செல்ல – அவை கடலினில் மாய்ந்தனவே கரைதனில் பேய் பிடித்தோன் சுகமடைந்தான் உடனே – கல்லறை 3. அதிசய நோய் பேய்களெல்லாம் இயேசு நாதனைக் கண்டோடும் அவரையே நீ நம்புவாயானால் ஆதரிப்பார் உன்னையே
பல்லவி கல்வாரியே கல்வாரியே கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என் சரணங்கள் 1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும் பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே 2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம் ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே 3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப் பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே 4. முள் முடி சூடியே கூர் ஆணி மீதிலே கள்ளனை போல என் நாயகன்
கலிலேயா கடற்கரையோரம் ஒர் மனிதர் நடந்து சென்றார் அவர்தான் இயேசு இரட்சகர் உன் பாவத்தை போக்கும் உத்தமர் 1. காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள் தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும் பெரும் கலக்கங்கள் பிடித்தாலும் கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது உன் கவலையை மாற்றிட துடிக்கிறது நெஞ்சமே நினைத்திடு அவர் அன்பினை ருசித்திடு 2. நண்பர்கள் பகைத்தாலும் – இந்த நானிலம் வெறுத்தாலும் பெற்றோர்கள் மறந்தாலும் உன் உற்றார்கள் பிரிந்தாலும் நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர் நன்மையினால்
கள்ளச் சாத்தான் என் இடம் வந்து ஆசைக் காட்டிடுவான் இயேசுவை விட்டு என்னைப் பிரித்து அழிக்கப் பாத்திடுவான் அவனைப் பார்த்து நானும் சொல்வேன் அப்பாலே போ என்று என்னோடே இருக்கும் இயேசுவைக் கண்டு ஓடி ஒளிந்திடுவான் – கள்ளச் சாத்தான்
கனி கொடுப்போம் கனி கொடுப்போம் இயேசுவுக்காய் நாம் கனி கொடுப்போம் அல்லேலூயா (3) 1. இயேசுவே மெய்யான திராட்சச் செடி நாமே கனிதரும் அவர் கொடிகள் இயேசுவின் வசனம் நம்மைச் சுத்தி செய்யவே மிகுந்த கினகளைக் கொடுத்திடுவோம் 2. அன்பு சந்தோஷம், சமாதானம் நீடிய பொறுமை, நற்குணம் தயவு விசுவாசம் சாந்தம் இச்சையடக்கமுமாம் ஆவியின் நிறைவின் அடையாளமாம் 3. தனக்குத்தானே கனிகொடுத்து நின்ற பயனற்ற இஸரவேல் பாழானதே சுவர் மீது படர்ந்து பிறர்க்குக் கனிதரும் யோசேப்பு போல