சிலுவையில் நின்றெழுந்த அன்பின் குரல்

சிலுவையில் நின்றெழுந்த அன்பின் குரல் – நம்மை சீராக்கி நேராக்கும் மன்னன் குரல் சரணங்கள் 1. மன்னிப்பின் குரலினையே முதலெழுப்பி மாந்தர் தம் பாவத்தை போக்கிவிட்டார் மீட்பின் குரலினையே பிறகெழுப்பி மாபெரும் கள்வனுக்கு வாழ்வளித்தார் (2) 2. பார்த்தின் குரல் தன்னை பார்த்திபனும் பார்போற்றும் மரியாளுக்கும் வழங்கி நின்றான் உயிரூட்டும் தந்தையின் கரம் பிடித்து உறுதியின் குரலினையே எழுப்பி நின்றார் (2) 3. நல் நீரை நான் தருவேன் என்றவரோ நாவறள தாகத்தின் குரலெழுப்பி முடிந்தது முடிந்தது […]

சிலுவையில் நின்றெழுந்த அன்பின் குரல் Read More »

சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க

சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க – இது சொன்னபடி நீங்களும் நடக்கணுங்க எட்டுத்திசை இருப்பவரும் ஓடி வாருங்க நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க சரணங்கள் 1. ஏரோது இராஜாவாயிருக்க லாமுங்க -இவர் சர்வ லோக ராஜாவாம் தெரிஞ்சிக்கிடுங்க பார்வோனின் சேனையெல்லாம் முங்கிப் போச்சுங்க நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க 2. யூதமதத் தலைவரென்று நினைக்காதீங்க – உங்கள் மதங்களுக்கு ஜீவ நாடி இவர்தானுங்க உப்பு இல்லா உபதேசங்கள் தேவைதானாங்க நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க 3.

சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க Read More »

சீயோன் பாதையில் செல்லுகின்ற

சரணங்கள் 1. சீயோன் பாதையில் செல்லுகின்ற இயேசுவின் போர் வீரரே இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் இருண்ட இவ்வுலகினிலே பல்லவி சேனையின் அதிபன் சர்வ வல்ல இயேசுவே சுவிசேஷத்தின் கொடி ஏற்றியே சாற்றுவோம் அவர் சத்தியமே 2. தேவன் ஈந்த சர்வாயுதமே தேவை இப்போர் முனையில் சாத்தானின் சைன்னியம் நடுங்கிடவே சந்தோஷித்தே மகிழ்ந்திடுவோம் – சேனையின் 3. ஸ்தோத்திர தொனியுமே முழங்கிடுவோம் யுத்தத்தில் போர் வீரரே இயேசுவின் நிந்தைகள் சுமப்பவரே இப்போரில் ஜெயம் பெறுவோம் – சேனையின் 4.

சீயோன் பாதையில் செல்லுகின்ற Read More »

சீயோனே ஆர்ப்பரி

பல்லவி சீயோனே ஆர்ப்பரி சிருஷ்டி கர்த்தரான உந்தன் சர்வ வல்ல தேவனே சரணங்கள் 1. சென்றதாம் பாதைகளிலே சேதமே யாதுமணுகா கண்மணி போலக் காவல் செய்தோனை நன்றியுடன் பாடுவோம் – சீயோனே 2. நீக்கினார் பாவப்பாரமே போக்கினார் சாபம் யாவுமே தாழ்த்தியே நீசக் கோலமதாகி தம் ஜீவனை ஈந்தாரே – சீயோனே 3. ஆதரவற்ற நேரத்தில் ஆறுதலில்லா வேளையில் அன்பாலணைத்து ஆறுதலீந்த அன்பனைப் போற்றிடுவோம் – சீயோனே 4. நிந்தையில் சோதனையிலும் வந்ததாலம் தொல்லைகளிலும் மாண்டவரோடு எம்மையும்

சீயோனே ஆர்ப்பரி Read More »

சுவிசேஷத்தைக் கேட்பீரே

பல்லவி சுவிசேஷத்தைக் கேட்பீரே சுதன் இயேசுவை ஏற்பீரே சரணங்கள் 1. நம் பாவங்கட்காகவே இம் மானிலம் வரவே சிலுவையைச் சுமந்தாரே ஜீவனையும் ஈந்தாரே – சுவி 2. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமே என்றாரே அவராலே யன்றி நித்திய ஜீவனில்லை என்றாரே – சுவி 3. வருத்தப்பட்டுப் பாரமே சுமப்பவர்கள் யாவரும் வருவீரே என்னிடமே தருவேன் இளைப்பாருதலே – சுவி 4. முள் முடியுடன் சிலுவையிலே முடிந்தது எல்லாம் என்றாரே உள்ளத்தில் விசுவாசித்தால் வல்ல இரட்சிப்பைப் பெறுவாய்

சுவிசேஷத்தைக் கேட்பீரே Read More »

சேவிப்போமே சேவிப்போமே

சேவிப்போமே சேவிப்போமே கர்த்தரையே சேவிப்போமே நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போமே சேவிப்போமே சேவிப்போமே கர்த்தரையே சேவிப்போமே

சேவிப்போமே சேவிப்போமே Read More »

சோபனமாக சுப தினமே

பல்லவி சோபனமாக சுப தினமே மாபெரும் ஆசிகள் மகிழந்தருள்வீர் சுப ஜெய மங்களமே (3) – ஆமென் அனுபல்லவி சீர்பெற திருமணம் என்றும் வாழ்க அருளோடும் புகழோடும் வாழ்ந்திடவே சரணங்கள் 1. ஆனந்தமாக வாழ்ந்திடவே ஆண்டவனருளால் அனுதினமே அன்பு கொண்டுந்தன் பதந் தொழுதே அல்லல்கள் நீங்கி அகமகிழ்ந்தே – சீர்பெற 2. மாநில மீதில் மனமுவந்தே மங்கள வாழ்வு தனிற் சிறந்தே பாலெனப் பொங்கிப் பல வளனும் பாக்கியம் புகழும் பரவிடவே – சீர்பெற 3. சந்ததி

சோபனமாக சுப தினமே Read More »

தத்தமாய்த் தந்தேன் என்னையே

பல்லவி தத்தமாய்த் தந்தேன் என்னையே நித்தமும் உந்தனின் சேவைக்கே சரணங்கள் 1. துட்டனாய் அலைந்த பாவி நானே கட்டளை யாவையும் மீறினேனே பட்டமா பாடுகள் போதுமென்றே கிட்டி உம் பாதமே வந்து நின்றே – தத்தமாய் 2. எந்தனின் உள்ளத்தில் ஆட்சி செய்வீர் சிந்தின ரத்தத்தால் சுத்தம் செய்வீர் எந்த இடத்திலும் எந்நேரமும் உந்தனின் சாட்சியாய் நின்றிடவே – தத்தமாய் 3. நீர் தந்த வேலையை நித்தமும் நான் நேர்மையாகச் செய்திட சக்தி ஈவீர் ஏழ்மையில் ஏங்கிடும்

தத்தமாய்த் தந்தேன் என்னையே Read More »

தாகத்தைத் தீருமையா அபி

பல்லவி தாகத்தைத் தீருமையா – அபி ஷேகத்தைத் தாருமையா – எங்கள் 1. ஆகமம் முன்னே அறிவித்த வண்ணம் ஆவியால் அடியாரை நிறைத்தீரல்லோ ஏக கர்த்தாவே, ஏழைகள் மீது இரங்கிடும் இப்போதே எம்மில் – எங்கள் 2. சத்துருவாலே சகிக்க வொண்ணாத எத்தனையோ இடர் வந்ததையோ, அத்தனே உமது அருள் பலத்தாலே நித்தமும் ஜெயம் கொள்வோம் – நாங்கள் – எங்கள் 3. வேதத்தின் பொருளை விளக்கிட வல்ல போதகராம் ஆவியானவரே, பாதத்தில் விழுந்து பணிந்திடுவோமே பரிசுத்த

தாகத்தைத் தீருமையா அபி Read More »

தாகமானீரோ இயேசு தற்பரா சுவாமி

பல்லவி தாகமானீரோ இயேசு தற்பரா சுவாமி தாரணியோர் மேல் கடுந் தாகமானீரோ சரணங்கள் 1. நித்திய ஜீவநதி நீரே யாயினும் நீசக் குருசில் நாதா தாகமானீரோ – தாக 2. கடற்காளானின் கடும் காடியோ உமக் கான பானமாம் நல்ல கர்த்தனே தேவா – தாக 3. பாவியடி யார் உம்மில் பாசம் வைத்திட ஞான தாகத்தால் வெகு நாட்டங் கொண்டீரோ – தாக 4. தேவ வசன ஞான திவ்விய பாலில் தேட்டமாய் நானும் என்றும்

தாகமானீரோ இயேசு தற்பரா சுவாமி Read More »

திட்டியே நகைத்து சேவகர் காடி

சரணங்கள் 1. திட்டியே நகைத்து சேவகர் காடி தேடியோர் நொடியினில் கொணர்ந்து எட்டிடாத் தூரத்தினில் அதை நீட்ட இறைவனும் ருசித்திடா திருக்க 2. துட்டனா மிடது பாரிசக் கள்ளன் துணிவு கொண்டையனை வைய மற்றவனவனைக் கடிந்து பகர வாயெடுத்தனன் அந்த நேரம் 3. குற்றமோ அணுவுமற்ற ஆண்டவன் மேல் குறைசொல்ல அச்சமில்லையோ? பட்டு நாம் தொலைக்கப் பல பாவம் புரிந்தோம் பரிசுத்தன் யாதும் செய்திலரே 4. கிட்டி நான் ராச்சியந்தனில் வரும்போது கிருபையாய் நினைத்தருளு மென்றான் மட்டிலாப்

திட்டியே நகைத்து சேவகர் காடி Read More »

திரும்பு மனந்திரும்பு

திரும்பு மனந்திரும்பு பரலோகம் சமீபமே விரும்பு இயேசுவை விரும்பு – அவர் வருகை சமீபமே அனுபல்லவி காலங்கள் போனால் திரும்பாது கிருபையின் நாட்களைத் தள்ளாதே (2) – திரும்பு 1. நாளை நாளை என்று நாளைக் கடத்தியே நாசம் அடையாதே மாய உலகத்தின் மயக்கும் பாதையில் மனதைச் செலுத்தாலே – காலங்கள் 2. கர்த்தர் வருகையின் தாமதம் எண்ணியே ஏளனம் செய்யாதே கடின உள்ளத்தோர் எவரும் மாறிட சந்தர்ப்பம் தருவாரே – காலங்கள் 3. கரங்களை நீட்டி

திரும்பு மனந்திரும்பு Read More »