தேவனைத் துதியுங்கள் நம் தேவனை
1. தேவனைத் துதியுங்கள் நம் தேவனைத் துதியுங்கள் தூயோனை வாழ்த்துங்கள் நம் தேவனைப் போற்றுங்கள் பல்லவி போற்றுவோம் புகழுவோம் வாழ்த்துவோம் வணங்குவோம் தேவாதி தேவனை வாழ்த்தி வணங்கிடுவோம் 2. காலைத் தள்ளாட ஒட்டார் உன்னைக் காக்கிறவர் உறங்கார் கர்த்தர் உன்னைக் காப்பார் உன் ஆத்துமாவைக் காப்பார் 3. கர்த்தரின் சமூகத்தில் கிருபைகள் ஏராளம் அண்டினோர்க் கென்றென்றும் சமாதானம் நிச்சயமே 4. நம்பி வருபவரை பாசமாய் சேர்த்துக்கொள்வார் நேசகரம் நீட்டி மார்போடு அணைத்துக்கொள்வார்