நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்

1. நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் நானிலமெங்கும் ஓங்கிடவே புனிதமான பரிசுத்த வாழ்வை மனிதராம் எமக்களித்தார் பல்லவி தேவ கிருபை எங்கும் பெருக தேவனை ஸ்தோத்திரிப்போம் பாவ இருள் அகல தேவ ஒளி அடைந்தோம் 2. அவரை நோக்கி கூப்பிடும் வேளை அறிவிப்பாரே அற்புதங்கள் எனக்கெட்டாத அறிந்திடலாகா எத்தனையோ பதிலளித்தார் – தேவ 3. பதறிப்போன பாவிகளாக சிதறி எங்குமே அலைந்தோம் அவரை நாம் தெரிந்தறியோமே அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் – தேவ 4. பலத்த ஜாதி […]

நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் Read More »

நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த

நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் – இந்த நானிலத்தில் வேறு தெய்வமில்லை – நம் 1. கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது எனப்படுமாம் – நம் 2. பாவமறியாத பரிசுத்தராம் இயேசு பாவிகளை இரட்சிக்க வந்தவராம் – நம் 3. பற்பல கிருபைகள் பகருகின்றார் – நாம் கற்புடன் அவர் பணி செய்திடவே – நம் 4. கற்சிலை பேசுமோ வாய்திறந்து – நம் கர்த்தர் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் – நம் 5. மறப்பாளோ தாய்

நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த Read More »

நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்

நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர் நாங்கள் இங்கே பாடும் எங்கள் இயேசு நல்லவர் உண்மை தெய்வம் இவர் உலகை இரட்சித்தவர் நன்மை செய்தே இவர் உலகை நாடெங்கும் சுற்றியவர் நானிலத்தோர்க்கு நன்மைகள் செய்த நல்லவர் – இயேசு 1. அன்பாய் பிறரை நேசிப்பவர்க்கு இயேசு நல்லவர் (1) ஆதரவில்லா அனாதைகட்கு இயேசு நல்லவர் திக்கற்றோர்க்கும் விதவைகளுக்கும் இயேசு நல்லவர் தீய வழிகளிலிருந்து திரும்பியவர்க்கு இயேசு நல்லவர் (2) – இயேசு நல்லவர் (4) 2.

நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர் Read More »

நல்லாவி ஊற்றும் தேவா

நல்லாவி ஊற்றும் தேவா நற்கனி நான் தர நித்தம் துதிபாட நல்லாவி ஊற்றும் தேவா 1. பெந்தெகோஸ்தே நாளிலே உந்தனாவி ஈந்தீரே இந்த வேளையில் இறங்கிடுவீரே விந்தை செய் விண் ஆவியே – நல்லாவி 2. மெத்த அசுத்தன் நானே சுத்தாவி கொண்டெனையே சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே சத்திய பரிசுத்தனே – நல்லாவி 3. ஆவியின் கனி ஒன்பதும் மேவி நான் தந்திடவும் ஜீவியமெல்லாம் புவி மீதிலே சுவிசேஷ பணியாற்றவும் – நல்லாவி 4. பாவம்

நல்லாவி ஊற்றும் தேவா Read More »

நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க

நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க நாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்க இயேசு நாதருங்க எங்க நாதருங்க சரணங்கள் 1. பாவி நானுங்க படகைவிட்டு வந்தேனுங்க பாசம் வச்சேங்க பழைய குணம் போச்சுங்க 2. யோவான் நானூங்க யாக்கோபுக்கு தம்பிங்க இயேசுவின் மார்பினிலே சாஞ்சு படுத்துக் கொண்டேனுங்க 3. தோமா நானூங்க சந்தேகமா இருந்தேங்க நானும் இந்தியாவுக்கு சுவிசேஷத்தை கொண்டு வந்தேங்க 4. இந்த ஊரில் இருப்பவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க இயேசுவை ஏற்றுக்கொண்டால் இன்பமாக வாழுவீங்க

நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க Read More »

நாவில் வந்திருப்பாயே நசரேயா

நாவில் வந்திருப்பாயே நசரேயா நாவில் வந்திருப்பாயே 1. தேவ செங்கோலா திருமனுவேலா தாவீதரசு பாலா நசரேயா – நாவில் 2. பாவியின் நேசா பரம சந்தோசா ஆவியை அருளீசா நசரேயா – நாவில் 3. உள்ளங்கள் உருக உன் சபை பெருக வள்ளலே தயை தருக நசரேயா – நாவில் 4. நின் கவிமானம் நிகழ்ந்த மெஞ்ஞானம் கல்மனம் உருகும்படி நசரேயா – நாவில் 5. ஆவியால் நிறைந்து அமலனை பாட ஆசியும் பொழிந்திடுவாய் நசரேயா –

நாவில் வந்திருப்பாயே நசரேயா Read More »

நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்

1. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் இராப்பகலை ஒழுங்காய் கடக்கிறேன் என்றும் நடக்கிறேன் பின் திரும்பேனே இயேசு ரட்சகர் பின்னே பல்லவி நடக்கிறேனே இரட்சகருடனே கடக்கிறேனே கரம் பிடித்தே விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனே ஒளியில் நடக்கிறேனே 2. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் வான் காரிருள் மூடினும் பயப்படேன் சீயோன் கீதம் பாடிச் செல்வேனே ஆயன் இயேசுவின் பின்னே – நடக்கிறேனே 3. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் வான் ஆசீர்வாதங்கள் அடைகிறேன் வீண் பாரங்களை விடுகிறேனே என்

நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் Read More »

நான் இயேசுவின் போர்வீரன்

நான் இயேசுவின் போர்வீரன் – 2 விசுவாசம் கேடகம் வேதவசனம் பட்டயம் இயேசுராஜன் என் பக்கம் வெற்றிகொள்வேன் நிச்சயம் – நான் இயேசுவின் சத்தியத்தின் கச்சைதனை கச்சிதமாய் கட்டுவேன் சமாதானம் சுவிசேஷம் பாதரட்சை ஆக்குவேன் சாத்தானை வெல்லுவேன் சமாதானம் கூறுவேன் அல்லேலூயா பாடுவேன் ஆர்ப்பரித்து மகிழுவேன் – நான் இயேசுவின்

நான் இயேசுவின் போர்வீரன் Read More »

நான் இயேசுவை நேசிக்கிறேன்

நான் இயேசுவை நேசிக்கிறேன் நான் அவர் அருகில் நித்தம் தங்கிடுவேன் நான் இயேசுவை நேசிக்கிறேன் I Love Him better every day (2) Close by His side I will abide I love Him better every day

நான் இயேசுவை நேசிக்கிறேன் Read More »

நான் பயப்படவே மாட்டேன்

பல்லவி நான் பயப்படவே மாட்டேன் என் தேவன் என்னோடு நான் கலங்கிடவே மாட்டேன் என் கர்த்தர் என்னோடு அனுபல்லவி பாடுவேன் பாடுவேன் பாடிடுவேன் உம்மை துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன் சரணங்கள் 1. மரணம் வருவதாயிருந்தாலும் பயப்படவே மாட்டேன் துன்பம் தொல்லைகள் வந்தாலும் பயப்படவே மாட்டேன் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் அதனை ஜெயித்திடுவேன் சாட்சியின் வசனத்தினால் சாத்தானை முறியடிப்பேன் – நான் 2. அக்கினி ஊடாய் நடந்தாலும் பயப்படவே மாட்டேன் ஆபத்து இடையில் வந்தாலும் பயப்படவே மாட்டேன் என் இயேசு

நான் பயப்படவே மாட்டேன் Read More »

நான் பாடும் கானங்களால்

நான் பாடும் கானங்களால் என் இயேசுவைப் புகழ்வேன் எந்தன் ஜீவிய காலம்வரை அவர் மாறாத சந்தோஷமே – நான் 1. பாவ ரோகங்கள் மாற்றியே எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே உலகம் வெறுத்தென்னைத் தள்ள பாவியம் என்னை மீட்டெடுத்தீர் – நான் 2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை யாதொரு பயமுமில்லை அவர் ஸ்நேக தீபத்தின் வழியில் தம் கரங்களால் தாங்கிடுவார் – நான் 3. நல்ல போராட்டம் போராடி எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன் விலையேறிய திருவசனம் எந்தன்

நான் பாடும் கானங்களால் Read More »

நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்

சரணங்கள் 1. நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா பாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே பல்லவி என் நாவிலே புதுப் பாட்டுகள் என்றென்றும் கவி தங்கிடும் மா சந்தோஷம் மறு பிறப்பீந்து மன இருள் நீக்கினார் 2. என் ஆத்த மீட்பை அருமையாய் இயேசாண்டவர் எண்ணியதால் சொந்தம் தம் ஜீவனாம் இரத்தம் எனக்காய்ச் சிந்தி இரட்சித்தாரே – என் 3. கார்மேகம் போல் என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரே மூழ்கியே தள்ளும் சமூத்திர

நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் Read More »