பாத்திரம் நிரம்பி வழிகின்றதே

பல்லவி பாத்திரம் நிரம்பி வழிகின்றதே பாடலும் நாவில் எழுகின்றதே பாடுவேன் என்றும் இயேசுவையே பாகமும் பங்கும் எனக்கவரே சரணங்கள் 1. பலத்தின் மேலே பலனடைந்தேன் பரத்தின் ஆவி வரமதனால் பள்ளம் மேடுகள் பலவரினும் பாடுகள் பட்டிட நான் தயங்கேன் 2. அருளின் மேலே அருளடைந்தேன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் அகலா முள் தான் இருந்திடினும் அருளேபோதும் என்றிடுவேன் 3. மகிமை மேலே மகிமையுண்டே மாண்பு மேலும் மேலுமுண்டே மண்ணில் வாழும் வாழ்வதிலே மகிமை கண்டேன் முன் சுவையாய்

பாத்திரம் நிரம்பி வழிகின்றதே Read More »

பாதம் போற்றியே பணிந்திடுவேன்

பாதம் போற்றியே பணிந்திடுவேன் – இயேசுவின் பாதம் போற்றியே பணிந்திடுவேன் 1. முன்னணைப் புல்லினை மிதித்திட்ட பாதம் மன்னவர் மூவர் பணிந்திட்ட பாதம் வண்ணமாய் மேய்ப்பர்கள் வணங்கிய பாதம் எண்ணிலாத் தூதர்கள் சுமந்திட்ட பாதம் 2. நோய்களைத் தீர்த்திட விரைந்திட்ட பாதம் பேய்களைத் துரத்திட சென்றிட்ட பாதம் மாய்ந்திடும் பாவியை ஈட்டிடும் பாதம் தூய்மையின் ஊற்றாம் இயேசுவின் பாதம் 3. பொங்கிடும் ஆழியின் அலைகளின் வேகம் மங்கிய இருளும் சூழ்ந்திடும் நேரம் ஏங்கிடும் சீஷரை மீட்டிடும் வண்ணம்

பாதம் போற்றியே பணிந்திடுவேன் Read More »

பாதை தெரியாத ஆட்டைப் போல

பல்லவி பாதை தெரியாத ஆட்டைப் போல அலைந்தேன் உலகிலே நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே சரணங்கள் 1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர் பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர் கல்வாரியின் அண்டை வந்தேன் பாவம் தீர நான் அழுதேன் – பாதை 2. என் காயம் பார்த்திடு என்றீர் உன் காயம் ஆறிடும் என்றீர் நம்பிக்கையோடே நீ வந்தால் துணையாக இருப்பேனே என்றீர் – பாதை 3. ஊனினை உருக்கிட வேண்டும் உள்ளொளி பெருக்கிட வேண்டும்

பாதை தெரியாத ஆட்டைப் போல Read More »

பார் பார் பார் இயேசுவின் ஜீவன்

பல்லவி பார் பார் பார் இயேசுவின் ஜீவன் போகுது பார் சரணங்கள் 1. கண்விழி வீழ்ந்திட கைகளயர்ந்திட கால்கரம் சாய்ந்துவிழ விண்ணொளி மங்கி ஆவி பிரிந்து திருமேனி குளிர்ந்திடுதே – பார் 2. பஞ்சகாயங்களில் செஞ்சுனை பாயுதுபாவி நெஞ்சைக் கழுவ சஞ்சீவி பஞ்சப் பிரளயம் சாவது தற்பரன் பக்கத்திலே – பார் 3. பாவநாசத்திலே புண்ணிய கன்மலை பார் முனி ஓங்கிய கோல் கோபதாபத்திலே வீசின வீச்சிலே குமிழி விட்டோடுது – பார் 4. கல்வாரி வெப்பிலே

பார் பார் பார் இயேசுவின் ஜீவன் Read More »

பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம்

1. பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார் பூரிப்பால் உள்ளம் யாவும் நிறைத்தார் பரிசுத்தவான்களோடு இணைத்தார் இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன் ஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன் ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன் அல்லேலூயா! அல்லேலூயா 2. பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே பரிசுத்த ஜூவாலை கவர்ந்து கொண்டதே உடல், பொருள், ஆவி, ஆன்மா யாவுமே இயேசுவின் சிலுவை அடிவாரமே 3. தாழ்மை உள்ளம் கொண்டு

பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் Read More »

பாவம் என்னைத் தொடர்ந்தாலும் இயேசு

பாவம் என்னைத் தொடர்ந்தாலும் – இயேசு தேவா, உம்மை மறவேனே 1. செய் பாவம் நினைத்து நான் அழுகின்றேன் – அதை செய்யாமல் இருந்திட பலமுமில்லை மெய்யாக உம் துணை வேண்டுமய்யா – எந்தன் அய்யா நின் பிள்ளை நானல்லவோ – பாவம் 2. உள்ளத்தில் நல்லலெண்ணம் பல உண்டு – ஆனால் வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லுகின்றேன் உள்ளதை உம்மிடம் சொல்லிவிட்டேன் – எந்தன் உடலையே உமக்கென தந்துவிட்டேன் – பாவம் 3. மன்னவா உம்மிடம் ஓடி

பாவம் என்னைத் தொடர்ந்தாலும் இயேசு Read More »

பாவம் பிரவேசியாய்

1. பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே தீட்டானதொன்றும் தீட்டானதொன்றும் ஓர்காலும் சேராதே 2. இதோ நல் மீட்பரே உம்மண்டையில் வந்தேன் என் பாவம் நீக்கி, என் பாவம் நீக்கி நீர் சுத்தமாக்குமேன் 3. உம் நேசப் பிள்ளையாய் நீர் சேர்த்துக்கொள்ளுவீர் தீமை செய்யாமல் தீமை செய்யாமல் என்னைக் காப்பாற்றுவீர் 4. பின் மோட்ச தேசத்தில் வெண் வஸ்திரம் தரிப்பேன் குற்றமில்லாமல் குற்றமில்லாமல் இன்பமாய் வாழுவேன்

பாவம் பிரவேசியாய் Read More »

பாவம் பெருகுதே

பல்லவி பாவம் பெருகுதே பாரும் பரன் இயேசுவே அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே! சரணங்கள் 1. ஆத்துமா இரட்சிப்பிழந்தவர் ஆயிரம் ஆயிரமாய் அன்றாடகம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே – பாவம் 2. இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர் எச்சரிப்பை வெறுத்து இரட்சகர் இயேசுவை இழந்தோராய் இன்றும் கெட்டழிகின்றார் – பாவம் 3. தானியேல் போல ஜெபித்திடும் தாசர் பலர் மறைந்தார் திறப்பின் வாசலில் நிற்கும் சிலர் தூங்கிக் களைத்துப் போனார் – பாவம் 4. எமது காரியமாகவே

பாவம் பெருகுதே Read More »

பாவி பரமசுதன் தாவி உனைத் தயவாய்

பல்லவி பாவி பரமசுதன் தாவிஉனைத் தயவாய் கூவி அழைக்கிறார் இதோ வாராயோ – ஓ அனுபல்லவி பூவின் பாவப் பாரத்தை மேவிச் சுமந்து தீர்த்த தேவாட்டுக்குட்டி இதோ பார் பார் பார் – ஓ பாவி 1. ஜென்மபாவத்தினோடு கன்மபாவமு முன்னை சின்னப்படுத்திதைப் பார் பார் பார் – உனின் நன்மை ஏதுமில்லாத தன்மை அதை அறிந்து நன் மணவாளனேசுவைச் சேர் சேர் சேர் – ஓ பாவி 2. சிற்றொளி தீபம் சுற்றிப்பறந்து நிற்கும் சிற்றுயிர்

பாவி பரமசுதன் தாவி உனைத் தயவாய் Read More »

பாவி யேசுனைத் தானே தேடித் துயர்

பல்லவி பாவி யேசுனைத் தானே தேடித் துயர் மேவினார் இதைத் தியானியே சரணங்கள் 1. பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன் பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன் மானிடனாக அவதரித்த தெய்வீகன் வல்ல பேயை ஜெயித்த மாமனுவேலன். – பாவி 2. தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக்குட்டி துன்பக் கடலில் அமிழ்ந்தாற்றுதல் செய்ய. – பாவி 3. இந்தப் பாத்திரம் என்னை விட்டகலாதோ?

பாவி யேசுனைத் தானே தேடித் துயர் Read More »

பாவியே நீ போகும் போது கூட

பல்லவி பாவியே நீ போகும் போது கூட வருவதென்ன? கூட வருவதென்ன? கொண்டு நீ வந்ததென்ன? 1. ஆடு மாடு நன்செய் புன்செய் வீடுவாசல் தான் வருமோ? பாடுபட்டு லாயக்காய் தேடும் பணம் வருமோ? – பாவி 2. உத்தியோக மதிப்புகளும் பி.ஏ., எம்.ஏ. பட்டங்களும் மெத்தவே அரையில் கட்டும் ஆடைகளும் வருமோ? – பாவி 3. மாயை மாயை மாயை என்று சொல்லுகிறான் பிரசங்கி ஞாயமாய்த் தீர்ப்பு செய்தார் ஞானி சாலமோன் தானே – பாவி

பாவியே நீ போகும் போது கூட Read More »

பாவியே ஜீவ ஊற்றண்டை வா

1. பாவியே ஜீவ ஊற்றண்டை வா மேவியே ஜீவனடைவாய் கூவியே இயேசு கூப்பிடுகிறார் தாவியே ஓடி நீ வா பல்லவி தாமதமே செய்திடாதே தருணமே இதை விடாதே தற்பரன் இயேசு உன்னை இரட்சிப்பார் பொற்பதம் ஓடியே வா 2. உள்ள நிலைமையுடனோடிவா கள்ள உலகை விட்டு தள்ள மாட்டாரே எப்பாவியையும் வல்ல இயேசு நாதரே – தாமதமே 3. பாவியொருவன் திரும்பும் போது மேவிகள் அவர் முன்னால் காவியங்கள் கொண்ட பாடல்களை கூவியே கூப்பிடுகிறார் – தாமதமே

பாவியே ஜீவ ஊற்றண்டை வா Read More »