மேகமீதில் இயேசு சுவாமி
பல்லவி மேகமீதில் இயேசு சுவாமி வேகம் வாராரே அனுபல்லவி ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்கவே அவர் வாராரே 1. ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாராரே மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் – மேகமீதில் 2. கிறிஸ்துவுக்குள் மரித்தோரெல்லாம் கிளம்பியே யெழும்பிடுவார் மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே – மேகமீதில் 3. பாடுபட்டோருக்குப் பலனளிப்பாரே பாடுபட்டவர் தாமே கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே கூவியே கொடுத்திடுவார் – மேகமீதில் 4. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே அவர் […]