Uncategorized

பாவம் பிரவேசியாய்

1. பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே தீட்டானதொன்றும் தீட்டானதொன்றும் ஓர்காலும் சேராதே 2. இதோ நல் மீட்பரே உம்மண்டையில் வந்தேன் என் பாவம் நீக்கி, என் பாவம் நீக்கி நீர் சுத்தமாக்குமேன் 3. உம் நேசப் பிள்ளையாய் நீர் சேர்த்துக்கொள்ளுவீர் தீமை செய்யாமல் தீமை செய்யாமல் என்னைக் காப்பாற்றுவீர் 4. பின் மோட்ச தேசத்தில் வெண் வஸ்திரம் தரிப்பேன் குற்றமில்லாமல் குற்றமில்லாமல் இன்பமாய் வாழுவேன்

பாவம் பிரவேசியாய் Read More »

புத்தம் புதிய பாடல் தந்தார்

புத்தம் புதிய பாடல் தந்தார் நித்தம் அவரைத் துதித்திடவே 1. காலையில் கூவிடும் பறவைகளும் மாலையில் கூப்பிடும் விலங்குகளும் இன்பமாய் இயேசுவை துதிக்கின்றன என்னையும் துதித்திட அழைக்கின்றன 2. மரங்களில் மோதிடும் தென்றல் காற்றும் பாறையில் மோதிடும் கடலலையும் துள்ளியே களிப்புடன் துதிக்கின்றன என்னையும் துதித்திட அழைக்கின்றன 3. காகங்கள் கரைந்திடும் குரலைக்கேட்டு படைத்தவர் மகிழ்ந்திடும் வேளையிலே பாவி என் பாடலில் துதி கேட்டு என் தேவனை களித்திட மகிழுவேன் நான் 4. உள்ளத்தில் பாவங்கள் இருக்கும்

புத்தம் புதிய பாடல் தந்தார் Read More »

பிறர் வாழவேண்டுமெனில்

பல்லவி பிறர் வாழவேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் – எனில் இயேசு தினம் வாழவேண்டும் 1. நான் என்னும் ஆணவத்தால் நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன் பிறர் வாழ்வை எண்ணாமல் பாதையிலே மயங்கி நின்றேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 2. மற்றவர்கள் மனம் மகிழ மன்னவனே நீ மரித்தாய் மற்றவர்கள் மனம் நோக மதியிழந்து நான் இருந்தேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 3. உலகுக்காய் நான் வாழ ஒரு மனது

பிறர் வாழவேண்டுமெனில் Read More »

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி

பிறந்தார், பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் சரணங்கள் 1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் மா தேவ தேவனே மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார் மா தியாகியாய் வளர்ந்தார் – பிறந்தார் 2. பாவ உலக மானிடர் மேல் பாசம் அடைந்தவரே மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய் மா ஜோதியாய் திகழ்ந்தார் – பிறந்தார் 3. பொறுமை, தாழ்மை, அன்புருக்கம் பெருந்தன்மை உள்ளவரே மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினதால் மேலான நாமம் பெற்றார் –

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி Read More »

பிரதான தூதன் எக்காளம் முழங்க

பல்லவி பிரதான தூதன் எக்காளம் முழங்க பரமன் இயேசு வருவார் (2) அனுபல்லவி சாயங்காலத்திலோ, நடுராவினிலோ சேவல் கூவிடும் நேரத்திலோ அதிகாலையிலோ எந்த வேளையிலோ பரமன் இயேசு வருவார் சரணங்கள் 1. இருவர் வயலில் இருப்பார் இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார் ஒருவர் கைவிடப்படுவார் ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர் – சாயங் 2. நோவா காலத்தின் சம்பவம் போல் நடந்திடும் அந்த நாட்களிலே புசித்தும் குடித்தும் பெண் கொண்டும் பலர் அசந்து வெறித்திருப்பார் – சாயங் 3. லெளகீகக்

பிரதான தூதன் எக்காளம் முழங்க Read More »

பாவியே ஜீவ ஊற்றண்டை வா

1. பாவியே ஜீவ ஊற்றண்டை வா மேவியே ஜீவனடைவாய் கூவியே இயேசு கூப்பிடுகிறார் தாவியே ஓடி நீ வா பல்லவி தாமதமே செய்திடாதே தருணமே இதை விடாதே தற்பரன் இயேசு உன்னை இரட்சிப்பார் பொற்பதம் ஓடியே வா 2. உள்ள நிலைமையுடனோடிவா கள்ள உலகை விட்டு தள்ள மாட்டாரே எப்பாவியையும் வல்ல இயேசு நாதரே – தாமதமே 3. பாவியொருவன் திரும்பும் போது மேவிகள் அவர் முன்னால் காவியங்கள் கொண்ட பாடல்களை கூவியே கூப்பிடுகிறார் – தாமதமே

பாவியே ஜீவ ஊற்றண்டை வா Read More »

பாவியே நீ போகும் போது கூட

பல்லவி பாவியே நீ போகும் போது கூட வருவதென்ன? கூட வருவதென்ன? கொண்டு நீ வந்ததென்ன? 1. ஆடு மாடு நன்செய் புன்செய் வீடுவாசல் தான் வருமோ? பாடுபட்டு லாயக்காய் தேடும் பணம் வருமோ? – பாவி 2. உத்தியோக மதிப்புகளும் பி.ஏ., எம்.ஏ. பட்டங்களும் மெத்தவே அரையில் கட்டும் ஆடைகளும் வருமோ? – பாவி 3. மாயை மாயை மாயை என்று சொல்லுகிறான் பிரசங்கி ஞாயமாய்த் தீர்ப்பு செய்தார் ஞானி சாலமோன் தானே – பாவி

பாவியே நீ போகும் போது கூட Read More »

பாவி யேசுனைத் தானே தேடித் துயர்

பல்லவி பாவி யேசுனைத் தானே தேடித் துயர் மேவினார் இதைத் தியானியே சரணங்கள் 1. பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன் பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன் மானிடனாக அவதரித்த தெய்வீகன் வல்ல பேயை ஜெயித்த மாமனுவேலன். – பாவி 2. தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக்குட்டி துன்பக் கடலில் அமிழ்ந்தாற்றுதல் செய்ய. – பாவி 3. இந்தப் பாத்திரம் என்னை விட்டகலாதோ?

பாவி யேசுனைத் தானே தேடித் துயர் Read More »

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே

பல்லவி பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே சரணங்கள் 1. தீயவர் திருடரும், கொடியவர் கொலைஞரும் இயேசுவில் மாற்றம் பெற்றார் மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு அழைக்கிறார் – ஓடியே வா 2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினை பெற்றவர் பலருமுண்டு இயேசு மகா இராஜன் உன்னைத் தான் அழைக்கிறார் நம்பி நீ ஓடியே வா 3. கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக் கனிவுடன் வேண்டுகிறோம் வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம்

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே Read More »

பேழையும் கட்ட கட்ட

பேழையும் கட்ட கட்ட வேலை செய்த மனிதர்களும் நோவா தாத்தா சொல்ல சொல்ல மறுத்து மறுத்து போய்விட்டனர் (2) – பேழையும் கட்ட கட்ட காலமோ செல்லச் செல்ல கர்த்தர் சொன்ன வார்த்தைகளை நோவா தாத்தா சொல்லச் சொல்ல கேலி செய்து போய்விட்டனர் (2) பாவம் உள்ள இந்த லோகம் பாவத்திலே மாண்டு விடும் என்ன சந்தோஷம் நமக்கு என்ன சந்தோஷம் இயேசு வந்த உள்ளத்தில் நித்திய சந்தோஷம் – பேழையும் கட்ட கட்ட 1. பேழையும்

பேழையும் கட்ட கட்ட Read More »

பேசினது போதுமப்பா நண்பா

பேசினது போதுமப்பா – நண்பா பேசினது போதுமப்பா 1. எங்கெங்கு பார்த்தாலும் பேச்சு இதுவா திருச்சபையின் மூச்சு பாங்காக உழைப்பதோ போச்சு பேச்சோடு நிறுத்திட லாச்சு 2. அன்பினைப் பற்றியே பேசி அழகான சொற்களையே வீசி அயலார்க்கு உதவிடவோ மறந்து ஆண்டவனின் பணி செய்யா திருந்து 3. எத்தனை மாநாடு கூட்டினோம் எத்தனையோ தீர்மானம் எழுதினோம் என்னதான் நடந்தது சொல்லப்பா என்னென்ன பணி செய்தோம் கூறப்பா

பேசினது போதுமப்பா நண்பா Read More »

பெரியவர் இயேசு

பெரியவர் (3) இயேசு யோனாவிலும் பெரியவர் சாலமோனிலும் பெரியவர் தேவாலயத்தில் பெரியவர் என்னில் இருப்பவர் பெரியவர் 1. கானாவூரினிலே கல்யாண வீட்டினிலே தண்ணீரை ரசமாக மாற்றின தேவன் – இயேசு 2. நாயீன் ஊரினிலே நடுத்தெரு வீதியிலே பாடை தொட்டு வாலிபனே எழுந்திரு என்றார் – இயேசு 3. நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் நீரினிலே நடந்து வந்து சீஷர்களைத் தேற்றின தேவன் – இயேசு

பெரியவர் இயேசு Read More »