En Yesuvai Vidamattean – என் இயேசுவை விடமாட்டேன்

என் இயேசுவை விடமாட்டேன்

பல்லவி
நான் விடமாட்டேன் என் இயேசுவை.

அனுபல்லவி

வான் புவியாவும் போனாலும்,-அத்தால்
மயங்கியே ஒருக்காலும் மெய்யாய். – நான்

சரணங்கள்

1. முந்தியென் மேலன்பு கூர்ந்தார்; இங்கே
முக்யநன்மைதரச் சேர்ந்தார்; தீய
எந்தனுக்காய்த்தம்மை யீந்தார்; எனக்
கெண்ணருநன்மைகள் நேர்ந்தார்; மெய்யாய். – நான்

2. வானலோகந்தனைத் துறந்தார்; ஏழை
மானிடனாகவே பிறந்தார்; மிக்க
ஈனனெனக்காக இறந்தார்; பேய் மேல்
என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார்; மெய்யாய். – நான்

3. மேசியாவுக் கிணையுண்டோ? அவர்
வேதத்துக்கொப்பு கற்கண்டோ? எனின்
நேசாசமுகம் பூச்செண்டோ? இந்த
நீசனத்தில் மொய்க்கும் வண்டோ? மெய்யாய். – நான்

4. லோகமெனை உதைத்தாலும், பொல்லா
லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும், பசி
தாகநோயும் வதைத்தாலும், இந்தத்
தாரணியோர் சிதைத்தாலும், மெய்யாய். – நான்

Leave a Comment