GUNAMAANEN NAAN GUNAMAANEN – குணமானேன் நான் குணமானேன் SONG LYRICS

பல்லவி
குணமானேன் நான் குணமானேன்
இயேசுவின் தழும்புகளால் குணமானேன் (2)
சுகமானேன் சுகமானேன்
நேசரின் காயங்களால் சுகமானேன் (2)
குணமானேன் நான் குணமானேன்…

சரணம் I
இயேசுவின் இரத்தம் எனக்காக தான்
சிலுவையில் சிந்தினதும் எனக்காக தான் (2)
முள் முடி ஏற்றதும் எனக்காகத்தான்
நொறுக்கப்பட்டதும் எனக்காகத்தான் (2)
எனக்காகத்தான் எனக்காகத்தான்
என் பாவத்திற்கு தான் உலகை மீட்பதற்கு தான்
குணமானேன் நான் குணமானேன்…

சரணம் II
பரிகாச சின்னமாம் சிலுவையிலே
கள்வர்கள் நடுவில் இயேசு தொங்கினார் (2)
இரக்கத்தால் கள்வனை மன்னித்து விட்டார்
சிலுவையில் நமக்காய் உயிர் கொடுத்தார் (2)
திரை சீலை இரண்டாக கிழிந்தது
உலக சரித்திரம் இரண்டாக மலர்ந்தது
குணமானேன் நான் குணமானேன்…

Leave a Comment