Nenje nee Kalangathae – நெஞ்சே நீ கலங்காதே

நெஞ்சே நீ கலங்காதே

பல்லவி

நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்
ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று.

அனுபல்லவி

வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் – நெஞ்சே

சரணங்கள்

1. வினைமேல் வினை வந்தாலும்,-பெண்சாதி பிள்ளை,
மித்ரு சத்ருவானாலும்,
மனையொடு கொள்ளை போனாலும், வானம் இடிந்து
வீழ்ந்தாலும். – நெஞ்சே

2. பட்டயம், பஞ்சம் வந்தாலும்,-அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்,
மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம்
கைவிட்டாலும் – நெஞ்சே

3. சின்னத்தனம் எண்ணினாலும்,-நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்,
பின்னபேதகம் சொன்னாலும், பிசாசு வந்தணாப்பினாலும் – நெஞ்சே

4. கள்ளன் என்று பிடித்தாலும்,-விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும்,
வெள்ளம் புரண்டு தலை மீதில் அலைமோதினாலும். – நெஞ்சே

Leave a Comment