Ninaiyean Manam Ninaiyean thinam – நினையேன் மனம் நினையேன் தினம்

நினையேன் மனம்
பல்லவி
நினையேன், மனம், நினையேன் தினம்
உனை மீட்ட யேசுவையே.
அனுபல்லவி
கன மேவிய மனு வேலனைக் கன காசன சுதனை.- நினை
சரணங்கள்
1. கவன முடன் நீடி, உனக் காக அருள் தேடிப்,
புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து,
தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண, சும்மா
பவம் நீக்கிய வானாசனப் பதியை, சுரர் கதியை. – நினை
2. நரக அழலாலே கெடு நாசம் வந்த காலே
உருகி, மனம் இரங்கித், தொலைத் துண்மையுடன் இணங்கி,
பரமனோடு உறவாக்கி, மெய்ப்பலனும் பெறத் தாக்கி,
பெருக நலம்புரிந்தோன், மறை பேதம் இன்றி அறைந் தோன். – நினை
3. ஜெயமும், புத்ர சுவிகாரமும், சிறந்த நீதியும், மகா
நயந்த பரிசுத்தம் தேவ ஞானமுடன் மீட்பும்
சுயமாக்கியும் அளித்தும் தனதுயிரைப் பலிகொடுத்தும்
பயன் ஏலவே, தூய ஆவியைப் பரிந்தோனையே கனிந்தே. – நினை

Leave a Comment Cancel Reply

Exit mobile version