Thiruma maraiyae – திருமா மறையே

பல்லவி
திருமா மறையே-அருள்பதியே! நின்
திருச்சபை வளர நின்தயை புரியே.
சரணங்கள்
1. கருணை வாசகக் கதிர்பலத் தொளிர,
கனகார் புவிநின்றே அகல,
மருள்ஜன மொளிபுற அவனரு ளுணர, – திருமா
2. யேசு நாமமெங் கணுமொளி வீச,
இறையே நினை மெய் விசுவாச
நேச மோடேயுனின் தாசர்கள் பேச. – திருமா
3. ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க,
நயவாக் களித்தாய் எமக்குருக்கச்,
சீலமதாயுனின் வசனமதுரைக்க. – திருமா
4. ஆறிரண்டு பேரான வருடனே
அமலா இருந்தாய் வெகுதிடனே,
போரற அருளிய நேயமே போலே. – திருமா
5. நின்னையன்றிக் கட்டிட எமக்காகா,
நேயா, தூயா நினை வாகா,
உன்னி உழைத்திடப் பலமளி யேகா. – திருமா
6. சத்ய போதம் இத்தரைதனில் செழிக்க,
தமியோர் நின் புகழே உரைக்க,
நித்திய பாக்கியமே புவிக் களிக்க. – திருமா

Leave a Comment Cancel Reply

Exit mobile version