பரலோகந்தான் என் பேச்சு – Paralogam Than En pechu

பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய்
தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா
1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார்
கூடவே வைத்துக் கொள்வார் -என்னை
2. உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரக் காண்பேன்
தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை
3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லி கேட்பேன் – அங்கு
சேர்ந்து பாடிடுவேன் -நான்
நடனமாடிடுவேன்
4. என் சொந்த தேசம் பரலோகமே
எப்போது நான் காண்பேன்
ஏங்குகிறேன் தினமும் – நான்
5. கண்ணிர்கள் யாவும் துடைக்கப்படும்
கவலைகள் மறைந்து விடும்
எல்லாமே புதிதாகும்
6. என்னோடு கூட கோடான கோடி
ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
கூட்டிச் சென்றிடுவேன்

Leave a Comment Cancel Reply

Exit mobile version