தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என்
இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனே
உலகத்திற்கு நீர்தான் இப்போ வேண்டும் ஐயா
நீரில்லாத வேர் ஆவி எமக்கு வேண்டாம் ஐயா
பரிசுத்த ஆவியாலே எம்மை நிறப்பும் ஐயா
எம்மை நிரப்பும் நிரப்பும் ஐயா
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே இங்கு வந்து பாவியான எங்களை நிரப்பும் நாங்கள் ஒன்றும் இல்லை எமக்கு ஞானம் ஒன்றுமில்லை எல்லாம் நீரே கற்றுத் தாரும்
ஆவியே நீர் இருந்தால் போதும் அங்கே ஒரு விடுதலை பெருக்கெடுத்தோடும்
ஆவியே நீர் வந்தால் போதும் அங்கே ஒரு சமாதானம் நிரம்பி வழியும். – உலகத்திற்கு
அன்பு சந்தோஷம் சமாதானம் நீடிய பொறுமை தயவு நற்குணம் விசுவாசம் சாந்தம் இச்சையடக்கம் ஆகிய ஆவியின் கனியை தரும் உலகத்தை கலக்கிடவே ஆவியே நீர் எமக்குள்ளே வாசம் செய்யும் உமக்காக வாழ்ந்திடவே ஆவியானவர் எமக்குள்ளே வாசம் செய்யும். – உலகத்திற்கு