Yesu Naathanae Irangum – யேசுநாதனே இரங்கும்

பல்லவி
யேசுநாதனே! இரங்கும் என் – யேசு நாதனே!
அனுபல்லவி
ஆசைக் கிறிஸ்தென தன்புள்ள நேசனே!
அருளே! தெருளே! பொருளே!
ஆவல் ஆகினேன் மகா பிரலாபம் மூழ்கினேன்
ஆயா! நேயா! தூயா! ரட்சியும்
ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன்.- யேசு
சரணங்கள்
1.அருமைரட்சகனே! உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா!
ஆத்துமநாயகன் நீ எனக்கல்லவோ? அன்புகூர் மெய்யா!
தருணம் தருணம் கைவிடாதேயும்
தலைவா! நலவா! வலவா!
தாமதியாதே – கிருபைசெய்யும்- சாமி இப்போதே
தாதா! நாதா! நீதா! நீகா!
தருமப்பிர காசனே! பரம சருவேசனே!- யேசு
2.ஐந்துகாயத்தின் கிருபைக்கோட்டையில் அடைக்கலந் தாவே
ஆதாமின் பாவத்தாலே மானிடன் ஆன மெய்வாழ்வே
விந்தைக்கிருபை அளிக்க வேண்டும்
விமலா! நிமலா! அமலா!
வேறு பண்ணாதே – மிகும்சீறு – மாறுநண்ணாதே
மேலா! கோலா! நூலா! நீயே
விரும்பிச்சேரும் கோவே! திரும்பிப்பாரும் தேவே! – யேசு
3.உன்னைப்போல் நரர்க்கார் பாடுபட்டது? உரிமைச் சீமோனே!
உத்தம மேய்ப்பனே! சத்தியமீட்பனே! உண்மைக் கோமானே!
என்னை ரட்சிப்பதுன்;கடன் அல்லவோ?
இறையே! நிறையே! பொறையே!
ஏதம் இல்லானே! – அடியாரைத் – தீதுசொல்லானே!
ஏகா! வாகா! ஆகா! இரட்சியும்
இரக்கமே உன்தஞ்சம் நெருக்கமே பிரபஞ்சம்.- யேசு

Leave a Comment Cancel Reply

Exit mobile version