அந்த அற்புதம் நடந்த கதை -Antha Arputham Nadantha kathai

அந்த அற்புதம் நடந்த கதை மிக ஆச்சர்யம் ஆச்சர்யமே
அற்புதங்களில் எல்லாம் சிறந்த ஆச்சர்ய அற்புதமே
1. நடத்தியவர் தேவன் நடந்ததென் உள்ளத்திலே
நம்பவும் முடியவில்லை அனுபவம் புதுமையதால்
2. தெய்வீக அன்பிது பேரின்பம் தந்தது
விவரிக்க முடியாத விளைவுகளைச் செய்தது
3. கிறிஸ்துவின் ஆளுகை கிருபையினால் வந்தது
கிரியை வழி பெற்றிட மலிவுப் பொருள் அல்லவே
4. சிந்தைதனில் தூய்மை செயலாற்ற இலட்சியம்
சின்னவன் எந்தனுக்கும் சிலுவையினால் வந்தது

Leave a Comment