அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin Devan enakulle

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார் – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான் – 2

1.எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அபிஷேகம் எனக்குத் தான் – 2

2.சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்
இந்த அபிஷேகம் முறிக்குமே – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அதிசயம் எனக்குத் தான் – 2

3.என் பாத்திரம் அபிஷேகத்தால்
அது நிரம்பி வழியுமே – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அக்கினி எனக்குத் தான் – 2

Leave a Comment