ஆத்துமா வாஞ்சித்து கதறுதே -Aathuma Vaanjithu Katharuthe

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே
நேசரின் முகத்தை தேடுதே
உம் பாதம் பணிந்து உம்மையே நோக்கி
ஆனந்தம் கொள்ளுதே

பாவ சேற்றில் கிடந்தேன் நான்
கழுவி அணைத்தீரே
நிம்மதியின்றி தவித்த எனக்கு
ஆறுதல் தந்தீரே

நீண்ட தூரம் சென்றேன் நான்
தேடி வந்தீரே
விலகி சென்ற என்னை அணைத்து
அன்பை தந்தீரே

பாலைவனத்தில் கிடந்தேன் நான்
பாதுகாத்தீரே
ஆதரவின்றி இருந்த எனக்கு
உதவி செய்தீரே

Leave a Comment