1. இன்ப லோகம் ஒன்று உண்டாம்
ஆ, இன்பம்!
பாவம் தொல்லை அங்கில்லையாம்
ஆ, இன்பம்!
பொன் வீணை! சுந்தர வீடு
ஜோதிமயத் தூதர் பாடும்
சங்கீத ஓசை அங்குண்டு
ஆ, இன்பம்!
2. பொல்லாக் காட்டு மிருகங்கள்
அங்கில்லை!
சாவு குழி அழிவுகள்
அங்கில்லை!
எல்லாம் சுத்தம் எல்லாம் நன்மை
மீட்பர் இரத்தம் பட்டு உண்மையாய்ச்
சீர்ப்படா பாவத் தன்மை
அங்கில்லை!
3. பாவிகட்காக மாண்டாரே
நம் இயேசு!
சாந்தமற்ற நமக்காக
மாண்டாரே!
பாவமெல்லாம் பறந்திடும்
மெய்ப் பாக்கியம் பிறந்திடும்
பரத்தில் மேன்மை வந்திடும்
மீட்பரால்!