என் விண்ணப்பம் கேட்பவரே -En Vinnappam Ketpavarae

என் விண்ணப்பம் கேட்பவரே
என் ஜெபத்தைக் கேட்பவரே
நீர் வாழ்க வாழ்கவே
எனக்கு நம்பிக்கை தருபவரே
எனக்கு நன்மைகள் தருபவரே
நீர் வாழ்க வாழ்கவே

உம்மை ஆராதிக்கின்றோம்
உம்மை வாழ்த்துகிறோம்
நீர் வாழ்க வாழ்கவே
ஆராதனை- (3)

சுகத்தை தருபவரே
விடுதலை தருபவரே
நீர் வாழ்க வாழ்கவே
பெலத்தை தருபவரே
கிருபையை தருபவரே
நீர் வாழ்க வாழ்கவே

என் கண்ணீர் காண்பவரே
என் வேதனை காண்பவரே
நீர் வாழ்க வாழ்கவே
என்னை தாங்கி கொள்பவரே
என்னை சுமந்து கொள்பவரே
நீர் வாழ்க வாழ்கவே

Leave a Comment