மனதுருகும் தேவனே என்னை -Manathurugum Devanae ennai

மனதுருகும் தேவனே என்னை தேற்றும் இராஜனே
நீரே எனது வழியையா
மனதுருகும் தேவனே என்னை தேற்றும் இராஜனே
நீரே எனது ஒளியையா
உம்மோடு நானும் உறவாடுவேன்
நீரின்றி நானும் உயிர் வாழேனே (2)

1. நம்பின மனிதர்கள் என்னை சூழும்போது
நீர் மட்டும் கைவிடாமல் என்னோடிருந்தீர்
நம்பின மனிதர்கள் கைவிடும்போது
நீர் மட்டும் கைவிடாமல் என்னோடிருந்தீர்
உம்மோடு நான் தங்கும் ஒரு நாளுமே
ஆயிரம் நாட்களும் வீணானதே
உம்மோடு நான் பேசும் ஒரு வார்த்தையே
ஆயிரம் வார்த்தையும் வீணானதே – உம்மோடு நானும்

2. பணம் உள்ளப்போது என்னை நம்பின மனிதர்கள்
பணம் இல்லாப்போது என்னை தூற்றினார்களே
எல்லாம் உள்ளப்போது என்னை நேசித்த மனிதர்கள்
ஒன்றும் இல்லாப்போது என்னை தூஷித்தார்களே
நான் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் நீர் மட்டும்தான்
என்னை வெறுக்காமல் கூடவே சேர்த்தீரையா
நான் வாழ்ந்தாலும் உன் நாமம் வாழ்த்திடுவேன்
நான் மரித்தாலும் உம் சந்நிதியில் சேர்ந்திடுவேன் – உம்மோடு நானும்

Leave a Comment