வெட்கப்பட்ட இடத்துல- Vetkapata idathula

வெட்கப்பட்ட இடத்துல
தோற்றுபோன நேரத்துல
தாழ்மையான இடத்துல
என்னை தூக்கினவரே
நன்றி ஏசுவே
நன்றி பிதாவே
பரிசுத்த ஆவியே நன்றி(4)

1)ஆடுகள் மேய்த்தவனை அரசனாக்கினார்
தாழ்மையில் இருந்தவனை உயர்த்தி வைத்திட்டார்
குறை சொன்ன வாயால புகழப்பண்ணினார்
அழிக்க நினைச்சவனை அலற பண்ணினார் – நன்றி இயேசுவே (2)

2)மீன்களை பிடித்தவனை சீஷராக்கினார்
கெபியில விழுந்தவனை உயர்த்தி வைத்திட்டார்
குழியில் போட்டவனை தூக்கி எடுத்திட்டார்
அடிமையானவனுக்கு ஆளுகை தந்தார் – நன்றி இயேசுவே

Leave a Comment