அப்பா எவ்வளவு இன்பமானவை
உமது வாசஸ்தலங்கள்
எனது ஆத்துமா உம்
ஆலயத்தை வாஞ்சிக்குதே..
ஆராதிப்பேன்.. ஆராதிப்பேன்..
எனது இயேசுவை ஆராதிப்பேன்
அப்பா உம் வீட்டில் வசிப்பதே
எனது பாக்கியமே..
அப்பா உம்மை துதிப்பதே
எனது வாஞ்சையே..
அப்பா உம்மிலே பெலன் கொள்வேன்
உமக்கு முன்பாக வந்து நிற்பேன்
என் விண்ணப்பத்தை கேட்டிடும்
எனக்குச் செவிகொடும்
அப்பா ஆலய வாசலில்
காத்திருப்பேன் உமக்காக
ஆயிரம் நாளிலும்
இந்த ஒரு நாள்
என் வாழ்வில் நல்லது
சேனையின் கர்த்தரை நம்பிடுவோர்
என்றும் கைவிடப்படவில்லை
என்னை உம் வீட்டில் சேர்க்கவே
வாரும் என் இயேசுவே..
