உன்னதம் ஆழம் எங்கேயும்

1.உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.
2.பாவம் நிறைந்த பூமிக்கு
இரண்டாம் ஆதாமே
போரில் சகாயராய் வந்தார்
ஆ, தேச ஞானமே!
3.முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர்தாம்
ஜெயிக்கத் துணையாயினார்
ஆ ஞான அன்பிதாம்
4.மானிடர் சுபாவம் மாறவே
அருளைப் பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும்
5. மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே
6.கெத்செமெனேயில், குருசிலும்
வேதனை சகித்தார்
நாம் அவர்போன்றே சகித்து
மரிக்கக் கற்பித்தார்
7. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்
அவரின் வார்த்தை; செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

Leave a Comment