Geethangalum keerthanaigalum

உன்னதம் ஆழம் எங்கேயும்

1.உன்னதம், ஆழம், எங்கேயும் தூயர்க்கு ஸ்தோத்திரம்; அவரின் வார்த்தை, செய்கைகள் மிகுந்த அற்புதம். 2.பாவம் நிறைந்த பூமிக்கு இரண்டாம் ஆதாமே போரில் சகாயராய் வந்தார் ஆ, தேச ஞானமே! 3.முதல் ஆதாமின் பாவத்தால் விழுந்த மாந்தர்தாம் ஜெயிக்கத் துணையாயினார் ஆ ஞான அன்பிதாம் 4.மானிடர் சுபாவம் மாறவே அருளைப் பார்க்கிலும் சிறந்த ஏது தாம் என்றே ஈந்தாரே தம்மையும் 5. மானிடனாய் மானிடர்க்காய் சாத்தானை வென்றாரே மானிடனாய் எக்கஸ்தியும் பட்டார் பேரன்பிதே 6.கெத்செமெனேயில், குருசிலும் வேதனை சகித்தார் …

உன்னதம் ஆழம் எங்கேயும் Read More »

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்

1 உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி ராஜாதி ராஜாவே உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே 2 கிறிஸ்துவே இரங்கும் சுதனே கடன் செலுத்தி லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக்குட்டி எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும் 3 நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமேன்

ஆத்மமே உன் ஆண்டவரின்

1. ஆத்மமே, உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து, மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து, அல்லேலுயா, என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி; கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி; அல்லேலுயா, அவர் உண்மை மா மகிமையாம் துதி. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்; நீச மண்ணோர் நம்மையே அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே! அல்லேலுயா, இன்னும் அவர் …

ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »