அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya

1. அல்லேலூயா என்றுமே அவருடைய
பரிசுத்த ஆலயத்தில் அவரைத்துதியுங்கள்,
என்றும் அவரைத்துதியுங்கள்.
வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்து
வல்லமை நிறைந்த கிரியைக்காக
அல்லேலூயா அல்லேலூயா.


2. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்,
என்றும் அவரைத்துதியுங்கள்.
வீணை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும்
யாழோடும் குழலோடும் தாளங்களுடனும்
அல்லேலூயா அல்லேலூயா


3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்
இங்கித சங்கீதத்தோடும் அவரைத்துதியுங்கள்.
என்றும் அவரைத் துதியுங்கள்.
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள்,
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள்.
அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya

Leave a Comment