Aan Pennaaiyum Sirustithu – ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து

1.ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து
விவாகத்துக்கு நேமித்து
ஆசீர்வதித்த ஆண்டவர்
தோத்திரிக்கப்பட்டவர்
2.கர்த்தாவே, இங்கே உம்மண்டை
நிற்கும் இம்மண மக்களைக்
கண்ணோக்கி அவர்களுக்கும்
மெய்ப் பாக்கியத்தை அருளும்.
3.இருவரும் சிநேகமாய்
இணைக்கப்பட்டுப் பக்கியாய்
உம்மில் நிலைத்து வாழவே
துணை புரியும் கர்த்தரே.
4.ஓர் சமயம் நீர் சிலுவை
அனுப்பினாலும் கிருபை
புரிந்தவர்கள் நன்மைக்கே
பலிக்கப் பண்ணும் நேசரே.
5.ஒன்றாய்ச் சேர்ந்தும்மை நம்புவோம்.
மன்றாடிப் போற்றித் தொழுவோம்
கர்த்தாவே, இன்றும் என்றைக்கும்
அடியாரை விடாதேயும்.

Leave a Comment