Aanantham Aanantham Undengal – ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள்

1. ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில்
ஆ-ன-ந்தம்! கர்த்தன் சேனை யிலுண்டு
பா-டு-ங்கள் பா-டு-ங்கள் துதிஸ்தோத்திரக் கீதங்கள்
கொட்டுங்கள் மேளங்கள் – வாத்தியம் முழங்கையில்
வாத்தியம் கொட்டி, கீதம் பாடுங்கள்
ஓசன்னாவென் றார்ப்பரியுங்கள்;
உன்னத தேசம் போகுவோம்
மா சந்தோஷம் கொள்வோம்
2. ஆ-ன-ந்தம்! ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில்
ஆ-ன-ந்தம்! கர்த்தன் சேனை யிலுண்டு
இரத்தமும் நெருப்பும் எம் சேனையின் தத்துவம்
இரத்தமும் நெருப்புமெம் யுத்தத்தின் சத்தம்;
இரத்தமும் நெருப்பும் எங்கள் யுத்த ஜெயம்
இரத்தமும் நெருப்பும் சாத்தானை ஓட்டும்
இரத்தமும் நெருப்பும் எம்மானந்தம்
எப்போதும் நல் ஜெயம்!
3. ஆ-ன-ந்தம்! ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில்
ஆ-ன-ந்தம்! கர்த்தன் சேனை யிலுண்டு
பாடுவோம் பாடுவோம் லோகம் மகிழும்வரை
ஆர்ப்பரித்திடுவோம் வானத்திலெட்டுமட்டும்
வாத்தியங்கள் மேளங்கள் ஆயிரமாய்,
துத்தியம் பாடித் துதிப்போம் கர்த்தனை;
அத்தன் வருமட்டும் ஆர்ப்பரித்து
எப்போதும் போற்றுவோம்

Leave a Comment Cancel Reply

Exit mobile version