வருகின்றார் இறைவன் வருகின்றார்

பல்லவி வருகின்றார் – இறைவன் – வருகின்றார் வான் புவி படைத்த வல்லவன் இறைவன் வாழ்வதின் ஊற்றாம் விண்ணவன் இறைவன் 1. வரலாற்றின் அகரத்தையே வகுத்தவர் அவரே வரலாற்றின் மானிடனாய் வந்தவர் அவரே வரலாற்றின் போக்கை மாற்றிஅமைப்பவர் அவரே வரலாற்றின் புதுமைதனை வடிப்பவர் அவரே 2. இல்லறத்தை நல்லறமாய் இணைப்பவர் அவரே அல்லல் உறும் வேளை வந்து அணைப்பர் அவரே எல்லையில்லா அமைதிதனை அளிப்பவர் அவரே இல்லம் வரும் இளையனை ஏற்பவர் அவரே 3. உரிமையுடன் ஆட்கொள்ளும் […]

வருகின்றார் இறைவன் வருகின்றார் Read More »

வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai Arul Niraive vaarum

வல்லமை அருள் நிறைவே வாரும் பின்மாரி பொழிந்திடுமே தேவ ஆவியே தாகம் தீருமே வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே சரணங்கள் 1. புது எண்ணெய் அபிஷேகம் புதுபெலன் அளித்திடுமே நவமொழியால் துதித்திடவே வல்லமை அளித்திடுமே – வல்லமை 2. சத்திய ஆவியே நீர் நித்தமும் நடத்திடுமே முத்திரையாய் அபிஷேகியும் ஆவியின் அச்சாரமாய் – வல்லமை 3. அக்கினி அபிஷேகம் நுகத்தினை முறித்திடுமே சத்துருவை ஜெயித்திடவே சத்துவம் அளித்திடுமே – வல்லமை 4. தூய நல் ஆவிதனை துக்கமும்

வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai Arul Niraive vaarum Read More »

வழியென்றால் எது அது ஜீவ வழி-Vazhi entraal ethu athu jeeva

1. வழியென்றால் எது? அது ஜீவ வழி வழி காட்டிட வந்தவர் யார்? அவர் இயேசு வழியும் அவர் ஒளியும் அவர் ஜீவ நதியும் அவரே சத்தியமும் அவர் நித்தியமும் அவர் ஜீவ அப்பமும் அவரே 2. ஒளியென்றால் எது? அது ஜீவ ஒளி ஒளி காட்டிடும் உத்தமர் யார்? அவர் இயேசு 3. ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம் ஜலம் காட்டும் சற்குருயார்? அவர் இயேசு 4. சத்தியம் என்றால் எது? அது

வழியென்றால் எது அது ஜீவ வழி-Vazhi entraal ethu athu jeeva Read More »

வளர்ந்தே பெருகுக என்றே உளம்

1. வளர்ந்தே பெருகுக என்றே – உளம் மகிழ்ந்தே புகழ்ந்திட வாரீர் தளர்ந்தே சோர்வுறும் கால்களே – பலம் அடைந்தே நடந்திட வாரீர் பல்லவி பெருகுவோம் – வளர்ந்து பெருகுவோம் – தேவன் அருளும் ஆவியின் அருமையாம் ஒளியில் – வளர்ந்தே பெருகுவோம் 2. இருநூறாண்டுகள் இறைவன் – நெல்லைத் திருச்சபை வளர்ந்திட நேர்ந்தார் வரும்பல ஆண்டுகள் எல்லாம் – இன்னும் பெருகிட அருள்வரம் ஈவார் 3. பிரிவினை எழுந்திடும் நேரம் – நம்மைக் கரிசனை யோடவர்

வளர்ந்தே பெருகுக என்றே உளம் Read More »

வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்தில்

வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்தில் வந்து நின் சுந்தரக்கையால் தந்திடும் நன்மையெல்லாம் 1. இராப்பகலெங்களைக் காரும் போக்குவரத்திலெல்லாம் கூப்பிடும் போதெல்லாம் கேட்டுக் கொண்டணைத்தன்பு செய்வாய் 2. உன்னடியாரெங்கள் வம்சம் உம்மை அடைந்திடவே உச்சித ரட்சண்ய வேலை ஊக்கமாய்ச் செய்திடவே 3. கல்வாரி ராயரின் புண்யம் கன்மிகள் எங்களுக்கே அல்லேலூயா சொல்லும் நாங்கள் ஐயனின் பொன்னடிக்கே 4. ஏசையனும் மையல்லாமல் எங்களுக்காருமில்லை நீசரென்றெம்மை விடாதே நின்னடி தஞ்சமையா 5. வந்தனம் வந்தனம் ராஜா சந்ததம் எங்களைக்

வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்தில் Read More »

வா வா இயேசு பாதம் தருவாராசீர்வாதம்

வா-வா இயேசு பாதம் தருவாராசீர்வாதம் வருவாய் ஓ இந்நேரம் உனக்கேன் தாமதம் வாராய் தீவிரமாய் வாசலண்டை நிற்கும் நேசர் பாராய் – வா-வா சரணங்கள் 1. ஓ காடு மேடாகச் சாடி ஓடும் ஆடே – உன் கோனார் நாடித்தேடி வாறார் உன் காலடி நில்-நில் நீங்காமல் நில்-நாச பாதை தனில் சென்றிடாமல் – வா-வா 2. ஓ கால் கரங் கன்னம் குருதி பாயு தின்னம் உருகுதவர் உள்ளம் உனக்கேன் கல் மனம் பார் பார்

வா வா இயேசு பாதம் தருவாராசீர்வாதம் Read More »

வா வா நேசா மலர் சுவிசேஷத்தின்

பல்லவி வா, வா, நேசா மலர் சுவிசேஷத்தின் மது தனை யுண்டிடவே அனுபல்லவி தேவாமிர்தமாம் ஜீவனைக் கண்டிட சாவாமிர்தமாம் சாமியை அண்டிட சரணங்கள் 1. ஜீவ போஜனம் ஜீவ நீரதும் தினமும் சுரந்திடுமே தினமும் பார்த்திட தினமும் கேட்டிட, சிந்தை வருந்திடுமே பாவ மனைத்தையும் பாடுடனழித்திடும் ஓவா மகிழ்ச்சியை உளமதிலளித்திடும் – வா வா 2. நானா துலகினில் நலம் பலவடைந்திட நல்லவழி தருமே நன்மை எடுத்துடன் தின்மை விடுத்திட நல்ல மனம் வருமே கானாக் கடவுளைக்

வா வா நேசா மலர் சுவிசேஷத்தின் Read More »

வா வா பாவி அழைக்கிறார் இயேசு

பல்லவி வா வா பாவி அழைக்கிறார் இயேசு ஆவலாய் தம்மிடம் – ஆ ஆ ஆ அனுபல்லவி தேவ குமாரன் தானே தேடியுனை அலைந்தாரே தேவ கோபம் வருமுன்னே ஜீவன் பெறத் தடை என்ன? – வா வா சரணங்கள் 1. தன்னிடம் வருவோர் எவரானாலும் தள்ள மாட்டார் இயேசு உன்னிடம் அன்போடவர்க்கு உருக்கமும் உண்டு அதற்கு உண்மையான அத்தாட்சி தன்னைக் கொடுத்ததே சாட்சி – வா வா 2. வருந்தி நீ பாவப்பாரம் சுமப்பதைப் பார்க்கச்

வா வா பாவி அழைக்கிறார் இயேசு Read More »

வாசலண்டை நிற்கும் நேசரை

வாசலண்டை நிற்கும் நேசரை பாராயோ கேளாயோ 1. காடு மேடாய் ஓடும் ஆடே நாடி தேடி வாராரே பாடுபட்டார் பாவம் தீர்க்க நாடும் என்றும் நாதன் பாதம் 2. உந்தன் பாவம் சுமந்தோரை சொந்தமாய் ஏற்றிடாயோ மிஞ்சும் உன் பாவம் நீக்கிடுவார் தஞ்சம் அவரே தாங்கிடுவார் 3. நல்லாயன் நான் என்று சொன்னாரே வல்லவர் இயேசு தாமே பொல்லாத எந்தப் பாவியையும் அல்லல் வராமல் தாங்கிடுவார் 4. உள்ளே வாரும் எந்தன் இயேசுவே தள்ளாமல் ஏற்றுக் கொள்வேன்

வாசலண்டை நிற்கும் நேசரை Read More »

வாடும் உள்ளங்களே

வாடும் உள்ளங்களே வாரீர் இறைவனிடம் தேடும் உள்ள அமைதி தேவன் தந்திடுவார் 1. வருந்தி சுமை சுமந்து வாழ்வில் பெலன் இழந்து தேடும் உள்ள அமைதி தேவன் தந்திடுவார் 2. உலக இன்பமதில் உழன்று அலைந்திடாதே குருசை சுமந்து சென்ற குருவைப் பின் தொடர்வோம் 3. இன்பம் என்றென்றுமே இயேசுவின் அன்பினாலே நாடிச் சென்றிடுவோம் மோட்சம் அடைந்திடுவோம்

வாடும் உள்ளங்களே Read More »

வாராயோ இயேசுவண்டை

வாராயோ இயேசுவண்டை தாராயோ உன் உள்ளத்தை (2) 1. பாழும் உலகின் பாதங்களில் பாவி சிக்குண்டலை கின்றாயோ பாசம் மிகுந்து பாரில் உதித்த நேசர் இயேசு சத்தம் கேள் 2. செல்வப் பற்றினால் சீர் கேட்டைந்து நல்லப் பாதையை மறந்தாயோ இல்லான் போலவே இகத்தில் திரிந்த வல்ல இயேசு சத்தம் கேள் 3. ஈசனோடு உள்ள பாச உறவை நீச துரோகத்தால் இழந்தாயோ நீசச் சிலுவை மீதில் தொங்கின நேசர் இயேசு சத்தம் கேள் 4. நன்றி

வாராயோ இயேசுவண்டை Read More »

வாரும் வாரும் மகத்துவ தேவனே

வாரும் வாரும் மகத்துவ தேவனே வல்லமையாக இப்போ வந்திடும் 1. மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே! மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே – வாரும் 2. தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்கு தரணியில் வேறோர் துணை இல்லையே – வாரும் 3. பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும் பரிசுத்த ராஜனே! நீர் வாருமே – வாரும் 4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற பரலோக ராஜனே! நீர் வாருமே – வாரும் 5. காருண்ய தேவனே!

வாரும் வாரும் மகத்துவ தேவனே Read More »