Ennai Deiva saayalaana – என்னைத் தெய்வ சாயலான

1. என்னைத் தெய்வ சாயலான
சிஷ்டியாக்கிப் பின்பு நான்
கெட்டபோதென் மீட்பரான
கர்த்தரே, நீர் நேசந்தான்
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.
2. என்னை முன்னமே தெரிந்து,
காலம் நிறைவேறின
போதென் ரூபையே அணிந்து
நர ஜென்மமாகிய
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.
3. எனக்காகப் பாடுபட்டு,
நிந்தையுள்ளதாகிய
சாவால் பரமண்டலத்து
பாக்கியத்தைத் தேடின
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.
4. எனக்கொளியும் வழியும்
சத்தியமும் நித்திய
ஜீவனும் பரகதியும்
சகலமுமாகிய
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.
5. என் துர்ச்சிந்தையை அறுத்து,
என்னை வென்று, என்னுட
உள்ளத்தை யெல்லாம் இழுத்து,
பரவசமாக்கின
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.
6. என்றும் என்னை உண்மையாக
நேசித்துப் பிதாவுட
பாரிசத்தில் எனக்காக
வேண்டிக் கொண்டிருக்கிற
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.
7. என்னை மண்குழியை விட்டு
எழச்சொல்லி, பரம
ஜோதியால் அலங்கரித்து
சேர்க்கச் சித்தமாகிய
நேசமே, நான் என்றைக்கும்
உம்முடையோனாகவும்.

Leave a Comment