Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ Song Lyrics

கல்வாரி பாதை இதோ
கால் நோகும் நேரம் இதோ
காயமுரும் கன்மலையோ
கண்காண கோரம் இதோ

1.கண்ணீரும் செந்நீரும் கைகலந்தே
கன்னத்தில் ஓடிடுதே
கைகால் தளர்ச்சியால் கண்ணயர்ந்தே
தள்ளாடும் நேரம் இதோ
கற்பாறை சுடும் கால்தடமோ
எப்பக்கம் குத்திடும் முட்கிரீடமே
காயமுறுத்திடும் கோரம் இதோ
கல்வாரியே..

2. முள்ளங்கி தாங்கியே வன்குருசில்
கள்ளர் நடுவினிலே
எவ்வளவும் கள்ளம் இல்லாமலே
எந்தனுக்காய் மாண்டீரே
தந்தையை நோக்கி கூப்பிடவே
சிந்தை கலங்கிடும் ரட்சகரே
பாவியாம் என்னையும் மீட்டிடவே
கல்வாரியே..

Leave a Comment