கூட நடந்தவர் திருப்பலி – Kooda Nadanthavar Thirupali

(கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்று
கண்டறிந்திடவே தாமதமா?) x 2
(குப்பையில் கண்டது மாணிக்கம் தானென்று
மனதில் உணர தான் தயக்கமென்ன?) x 2
கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்று
கண்டறிந்திடவே தாமதமா?

1.(கோதுமை மணிகள் ஆனந்த களிப்புடன்
திருவிருந்தாக நொறுங்கிடும்போது) x 2
(கோதுமை துண்டுகள் புனித பாத்திரம்
திருப்பலியில் வாழ்த்தப்படவே) x 2
(தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிடும் நேரம்
திருப்பலியாகின்ற மனுஷனை காண்போம்) x 2.

2. (பாழ் முழ மூங்கிலும் துதிகீதம் பாடும்
இதயம் துளைக்கும் தியாகம் ஏற்றாலும்) x 2.
(வலிகள் நல்கிய நன்மைகள் நினைவிலே
வலிதந்த மனுஷனை மன்னிக்கவே) x 2
(தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிடும் நேரம்
திருப்பலியாகின்ற ஜீவியம் காண்போம்) x 2.

கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்று
கண்டறிந்திடவே தாமதமா?
குப்பையில் கண்டது மாணிக்கம் தானென்று
மனதில் உணர தான் தயக்கமென்ன?

(தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிடும் நேரம்
திருப்பலியாவதை சிருஷ்டிகள் காண்போம்
தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிய சிநேகம்
திருப்பலியாகின்ற தெய்வத்தின் சிநேகம்) x 2.

Leave a Comment