Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை

1.பிதாவே, மெய் விவாகத்தைக்
கற்பித்துப் காத்து வந்தீர்,
நீர் அதினால் மனிதரை
இணைத்து, வாழ்வைத் தந்தீர்.
அதந்கெப்போதுங் கனமும்
மிகுந்த ஆசீர்வாதமும்
நீர்தாமே வரப்பண்ணும்.
2.நன்னாளிலுந் துன்னாளிலும்
ஒரே நெஞ்சை அளியும்,
நீர் எங்கள் இருவரையும்
உம்மண்டை நடப்பியும்
கர்த்தா உம்மைமுள்ளிட்டெதை
நன்றாக வாய்க்கப் பண்ணும்.
3.அடியார் பார்க்கும் வேலையை
ஆசீர்வதித்து வாரும்.
நீர் உம்முடைய தயவை
அடியாரக்குக் காரும்.
முகத்தின் வேர்வையோடப்போ
சாப்பிடும் அப்பத்திற்கல்லோ
நீரே நல்ருசி ஈவீர்.
4.நீரே ஆசீர்வதித்கையில்,
தடுக்கவே கூடாது.
அப்போதெண்ணெய்கலயத்தில்
குறைபட மாட்டாது.
குறைவை நிறைவாக்குவீர்.
நீர் பேசும் வார்த்தையால் தண்ணீர்
நல் ரசமாக மாறும்.
5.நீரே அனுப்புந் துன்பத்தைச்
சகிக்கச் செய்வோர் நீரே,
இராத்திரியில் அழுகை
ஆனாலும், தேவரீரே
காலையில் மகிழ்வீய்கிறீர்,
அனைத்தையும் நன்றாக்கினீர்
என்றும்மையே துதிய்போம்.
6.ஆ, ஜீவ ஊற்றாம் இயேசுவே,
நீங்காத ஜீவன் ஈவீர்,
என் ஆத்துமத்தை, நேசமே.
மணந்து ஏற்றுக் கொள்வீர்.
ஆ, ஞான மணவாளனே,
இங்கங்கும் அடியாருக்கே
குறைச்சல் ஒன்றும் இல்லை.

Leave a Comment