கீழே விழுந்தவனாய்
மேலே பார்த்தவனாய் (2)
தூக்கிவிட யாருமில்லை!
தனிமையில் யாருமில்லை,
கவலை என் வாழ்க்கையானதே,
கண்ணீர் என் உணவானதே!
தூக்கி எடுத்தீரே…..
என்னை தூக்கி எடுத்தீரே….
வாழ்வில் உதித்த சூரியனாய்
என்னை தூக்கி எடுத்தீரே….
1. ஞானிகளை வெட்கப்படுத்த பைத்தியம் என்னையும் தெரிந்ததே..
பலமுள்ளதை வெட்கப்படுத்த பெலவீனன் என்னையும் தூக்கினீரே..
உள்ளதை அவமாக்கவே இல்லாத என்னையும் தெரிந்தீரே,
உள்ளதை அவமாக்கவே இழிவான என்னையும் தெரிந்தீரே….
என்னை தூக்கி எடுத்தீரே….
என்னை தூக்கி எடுத்தீரே….
வாழ்வில் உதித்த சூரியனாய்
என்னை தூக்கி எடுத்தீரே….