Um Siththam Deva – உம் சித்தம் தேவா

1. உம் சித்தம் தேவா உம் சித்தமே
குயவன் நீர் தாமே களிமண் நானே;
உம் சித்தம் போல ஆக்கும் என்னை
ஒப்புவித்தேனே பூரணமாய்
2. உம் சித்தம் தேவா உம் சித்தமே
தேடும் என்னை தம் சித்தம் போல;
கழுவும் என்னை வெண்மையாக
தம் சமூகம் நான் பணிகிறேன்
3. உம் சித்தம் தேவா உம் சித்தமே
நொந்து சோர்பானேன் தாங்கிடுமே
வல்லமை யாவும் தமக் கென்றும்
தொட்டென்னை சொஸ்தமாக்கும் தேவா!
4. உம் சித்தம் தேவா உம் சித்தமே
என்னை முற்றுமாய் ஆட்கொள்ளுமேன்;
ஆவியால் எந்தனை நிரப்பி
என்னில் எப்போதும் வாசம் செய்யும்

Leave a Comment