கதை சொல்லவா – kathai sollava

கதை சொல்லவா ஒரு கதை சொல்லவா
சிறு விதைபோல நீயல்லவா
இயேசு மகா ராஜ பிதா
உவமானம் அதை சொல்லவா

ஒரு நாள் ஒரு விதைக்கின்றவன்
பதமான விதை எடுத்தான்
பயிர் செய்யவே பரவசமாய்
விதைகளை தூவ சென்றான்

வழியருகே விழுந்த விதை
பறவைக்கு விருந்தாயிற்று
பாதையிலே விழுந்த விதை
பயனின்றி போய்விட்டது

முட்களிலே விழுந்த விதை
முள்ளாலே அழிவுண்டது
நல்ல நிலம் விழுந்த விதை
நூறாக பலன் தந்தது

உள்ளம் என்னும் நிலம்
அதிலே அன்பென்னும் தத்துவத்தால்
அனுதினமும் வாழ்ந்து வந்தால்
எந்நாளும் ஆசீர்வாதம்

Leave a Comment