Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா

Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா

என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்

பல்லவி
என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்
என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம்
பரமானந்த மோட்ச சுகானந்தம்
அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்

சரணங்கள்

1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2)
கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் — என்ன சுகம்

2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2)
சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் — என்ன சுகம்

3. ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (2)
ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம் — என்ன சுகம்

4. தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம் (2)
சிங்காசனத்தினின்று ஜெயகீதம் பாடலாம் — என்ன சுகம்

5. வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை (2)
கேட்டின் மனுடர் வந்து ஊடே யிருப்பதில்லை — என்ன சுகம்

6. துன்பம் ஒழிந்து மீட்பு இன்பமடையலாம் (2)
துயரின் சமூகத்தில் கூடி கொண்டாடலாம் — என்ன சுகம்

7. இயேசுவின் ரத்தத்தால் மீட்பை யடைந்தவர்கள் (2)
ஆசனம் மீதிருந்து ஜெயகீதம் பாடுவார்கள் — என்ன சுகம்

Leave a Comment