மகிமை நினைத்தால் 
மனம் பூங்காற்றிலே மிதக்கும் 
புதுமை தேவன் புகழ் பல நூற்றாண்டுகள் நிலைக்கும்
விழி என்றாலும் ஒளி என்றாலும் 
நமக்கு அமைத்தார் தேவனே 
உடல் என்றாலும் உயிர் என்றாலும் 
உணர்வில் கலந்தார் இயேசுவே 
புவனம் போற்றி பாட பேரின்ப 
வாழ்வில் பாரம் சுமந்தார் 
புனித பூமி ஆள மேசியா 
முள்ளால் மகுடம் அணிந்தார் 
பிறந்தார் நமக்காகவே பிறரின் உயிர் காக்கவே
இசை என்றாலும் பொருள் என்றாலும் 
இதயம் மலர்ந்தார் இயேசுவே சுமை என்றாலும் 
சுவை என்றாலும் இரண்டின் முடிவும் இயேசுவே 
மதுர தேவ கீதம் நாளெல்லாம் படித்தால்
யாவும் சேரும் உலகம் சுழலும் ராகம்
இயேசுவின் ஒரு சொல் சுதியை சேர்க்கும் 
பிறந்தார் நமக்காகவே தினமும் நமை காக்கவே

