Neer Paaratina Tamil Christian Song Lyrics, Written and sung by Evangelist Augustin Rajasekar. Intercession Mission – நீர் பாராட்டின
(என் தகப்பனே வருடங்கள் தோறும் நீர் எனக்கு
பாராட்டுகிற கிருபைகளை உணர்ந்து கண்ணீரோடு
உமக்கு நன்றி சொல்லுகிறேன்)
நீர் பாராட்டின உம் கிருபையை நினைத்து
தாழ்மையாய் நான் வாழ்ந்து வருவேன்
நீர் அருளி செய்த உம் இரட்சிப்பை உணர்ந்து
கண்ணீரோடு உமக்கு நன்றி சொல்லுவேன்
உமக்கு துரோகம் செய்ய எனக்கு விருப்பமில்லை
உம்மை துக்கப்படுத்த என் மனம் விரும்பவில்லை -2
( என் சரீரம் வேசித்தனத்திற்கு அல்ல
கர்த்தராகிய உமக்கே உரியது
பாவ ஆசைகளால் தீட்டுப்படுத்தாமல் பரிசுத்தமாய் காக்க
கிருபை தருவீராக )
என் சரீரம் உமது ஆலயம் தீட்டுப்படுத்தாமல்
அதை காக்க வேண்டுமே -2
கிருபையின் ஆவியே
கிருபை தாருமே
பரிசுத்த ஆவியே
பரிசுத்தமாக்குமே -2
(ஆண்டவரே நீர் எனக்கு கொடுத்த பிள்ளைகள் உமது சுதந்திரம் சர்ப்பமாகிய சாத்தான் வஞ்சிக்காதபடி
நுகங்களை முறித்து கட்டுகளை அறுத்து
சத்தியத்தின் பாதையிலே நடத்துவீராக)
என் பிள்ளைகள் உமது சுதந்திரம்
சர்ப்பம் வஞ்சிக்காமல்
சாட்சியாய் வளர வேண்டும் -2
சத்திய ஆவியே
போதித்து நடத்துவேன்
விடுதலை ஆவியே
விடுதலை தாருமே -2
(தகுதி இல்லாத எனக்கும் உமக்கு ஊழியம்
செய்கிற பாக்கியம் தந்தீரே
என் இஷ்டம் அல்ல உம் சித்தம் செய்யவே என்னை
அர்ப்பணிக்கிறேன்
என் சித்தம் செய்கிறவனே பரலோகத்தில் என்று
சொன்னீரே
என் சித்தம் அல்ல உம் சித்தம்
செய்கிறவனாய் என்னை மாற்றும் மாற்றும் என
கெஞ்சுகிறேன் அப்பா)
என் ஊழியம் உமது பாக்கியம்
உம் சித்தம் அறிந்து
நான் செய்து முடிக்கும்
என் ஊழியம்
உமது பாக்கியம்
உம் சித்தம் அறிந்து
நான் செய்து முடிக்கணும்
வல்ல ஆவியே
வரங்களை தாருமே
மகிமையின் ஆவியே
மறுரூபமாக்குமே -2
நீர் பாராட்டின உன் கிருபையை நினைத்து
தாழ்மையாய் நான் வாழ்ந்து வருவேன்
நீர் அருளி செய்த உம் இரட்சிப்பை உணர்ந்து
கண்ணீரோடு உமக்கு நன்றி சொல்லுவேன்
உமக்கு துரோகம் செய்ய எனக்கு விருப்பமில்லை
உம்மை துக்கப்படுத்த என் மனம் விரும்பவில்லை -2
Neer Paaratina Song Lyrics, நீர் பாராட்டின பாடல் வரிகள்
Neer Paaratina Lyrics in English
Neer Paaratina Um Kirubaiyai Ninaithu
Thazhmaiyaai Naan Vaalnthu Varuvean
Neer Aruli Seitha Um Ratchippai Unarnthu
Kannerodu Umakku Nantri Solluven
Umakku Thurogam Seiya Enakku Viruppamillai
Ummai Thukkapadutha En manam Virumbavillai -2
En Sareeram Umathu Aalayam Theettupaduththamal
Athai Kaakka Vendumae -2
Kirubaiyin Aaviyae
Kirubai Thaarumae
Parisutha Aaviyae
Parisuthamakkumae -2
En Pillaigal Umathu Suthanthiram
Sarppam vanjikkamal
Saatchiyaai Valara Vendum -2
Saththiya Aaviyae
Pothithu Nadathuvean
Viduthalai Aaviyae
Viduthalai Thaarumae -2
En Oozhiyam Umathu Pakkiyam
Um Siththam Arinthu
Naan Seithu Mudikkum
En Oozhiyam Umathu Pakkiyam
Um Siththam Arinthu
Naan Seithu Mudikkanum – Neer Paaratina
Valla Aaviyae
Varankalai Thaarumae
Magimaiyin Aaviyae
Maruroobamakkumae -2
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- Neer Paaratina Lyrics – நீர் பாராட்டின is a Tamil Christian song written and sung by Evangelist Augustin Rajasekar.
- The song expresses gratitude for God’s grace and speaks about living humbly in faith.
- It emphasizes the importance of God’s guidance for children to grow in freedom and faith.
- The lyrics highlight a strong desire to avoid wrongdoing and to be a faithful servant of God.
- Published by World Tamil Christians, the article includes links to related songs and content.
Estimated reading time: 3 minutes
