ஒரு வேனில் இராத்திரியில் -Oru Vaenil Raathiriyil

ஒரு வேனில் இராத்திரியில் இளங்காலை சொப்பனமாய்
வான்தூதர் உன்னில் வந்த நேரம்
மறுவார்த்தை சொல்லிடாமல் நல்கினாய் உன் இளமையை
பூலோக நாதரின் அம்மாவாக
நன்றியோடு நினைப்போம் அம்மாவின் மக்கள் நாம்
மேரி மாதாவே உன் தியாகார்ப்பணம்….ஒரு வேனில் இராத்திரியில்….

மின்னிடும் நட்சத்திரமே, அம்மா நீ அகலாமலே
சொர்க்கத்து பீடத்தில் அலங்காரம் ஆகும் எம்தாயே மனோகரி
சிநேகார்ப்பணம் அம்மாவே தந்திடுவோம்
ஆத்மாவின் பலிபீடத்தில்.

1. குளிர் அலை பனித்துளி சூடிய குளிர்மாத இராத்திரியில்
இலை உதிர சருகாக வீதியில் திறக்காத வாசற்படிகளில்
உள்ளிலே ஜீவனாம் பிள்ளையின் நோவின் துடிப்புமாய் நீ அலைந்து
மாட்டுத்தொழுவம் ஓரமாய் நின்று கண்ணிமை மூடாமல் காவலானாய்
உள்ளம் நொறுங்கும் ஓர் இராக்குளிரில் முத்தப் போர்வையிலே வெப்பம் நல்கி
தாலாட்டு பாட்டிலே சந்தமாகி அணைத்துறங்கிட உன் இதயதாளம்
(பிள்ளையை வருடி தாலாட்டிய இளந்தென்றல்) x 2
அம்மா உன் காதில் சொன்னது மென்மையாய்
(நன்றி நன்றி மாத்திரம்) x 2
…..ஒரு வேனில் இராத்திரியில்

2. காலை வெயில் அலங்காரமேற்றிய எருசலேம் தேவாலயத்தில்
ரச ஜாடிகள் ருசி பகிர்ந்திடவே கானாவூர் கல்யாண வீட்டில்
நீ ஜீவன் ஏந்திய தெய்வீக புறாவின் ஆத்மாவின் குனுகல் நீ அறிந்திருந்தாய்
கல்வாரி குன்றின் பள்ளத்தாக்கில் கண்ணீரால் வரைந்த சித்திரமாகி
அம்மாவின் அன்பென்னும் தீச்சூளையில் புத்திரன் இழப்பின் சாட்சியானாய்
பாசப்பிணைப்போடுன் மடியினில்
தழுவி உறங்கிட பொன்மகனை
(எருசலேம் புத்திரிகள் குருசின் வழிகளில்) x 2
அம்மா உன் காதில் சொன்னது மென்மையாய்
(நன்றி நன்றி மாத்திரம்) x 2
…..ஒரு வேனில் இராத்திரியில்

மின்னிடும் நட்சத்திரமே, அம்மா நீ அகலாமலே
சொர்க்கத்து பீடத்தில் அலங்காரம் ஆகும் எம்தாயே மனோகரி
சிநேகார்ப்பணம் அம்மாவே தந்திடுவோம்
ஆத்மாவின் பலிபீடத்தில்.

Leave a Comment