Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின

1. பண்டோர் நாளிலே தூதர் பாடின
பாடல் என்னென்று அறிவாயா?
வானில் இன்ப கீதம் முழங்கிற்று
அதன் ஓசை பூவில் எட்டிற்று
பல்லவி
ஆம், உன்னதத்தில் மேன்மை
பூமியில் சமாதானம்
மண்ணுலகில் மானிடர் மேல் பிரியம்
உன்னதத்தில் மேன்மை (2)
இன்னிலத்தில் சமாதானம்
மனுஷர் மேல் பிரியம்
2. அன்று ராத்திரியில் ஆயர்கள் கேட்ட
பாடல் என்னென்று அறிவாயா?
தூதர் இன்னோசையுடனே பாடினார்
ஆயர் உள்ளம் பூரிப்படைந்தார் – ஆம்
3. கீழ்தேசத்து, சாஸ்திரிகள் சொல்லிக் கொண்ட
கதை என்னென்று அறிவாயா?
பாதை காட்டிடவே ஓர் நட்சத்திரம்
மகா ஆச்சரியமாய்த் தோன்றிற்றாம் – ஆம்

Leave a Comment