இராஜா இயேசு இராஜா – Raja Yesu Raja

RAJA YESU RAJA

இராஜா இயேசு இராஜா – Raja Yesu Raja

இராஜா இயேசு இராஜா-2
பாவி என்னை தேடி வந்தீரே
பாவ பலியாய் உம்மை தந்தீரே
நித்திய மீட்பை தந்திடவே-இராஜா

1.பாவமறியா பரிசுத்தரே
பாவத்தை போக்க பாவமானீர்-2
எனக்காக எனக்காக
இனி நான் வாழ்வது உமக்காக-இராஜா

2.விலை ஏதும் இல்லா கிருபை ஈந்து
விலை என்ன தருவேன் இதற்காக-2
ஏதும் இல்லை ஏதும் இல்லை
என்னையே தந்தேன் உமக்காக-இராஜா

3.என் கரம் கண்டு என்னை மீட்க
உம் கரம் தந்தீர் எதற்காக-2
என்ன செய்தேன் நான் என்ன செய்வேன்
என்னில் உம் அன்பை காண செய்வேன்-இராஜா

 

Leave a Comment