இருளினில் பகலனவாய் – Irulinil Pagalanavaai

இருளினில் பகலனவாய்
தோன்றிய எங்கள் தேவனே
மனிதனின் மாசினை
அகற்றிடும் இயேசு ராஜனே

ஈசாயின் மரத் துளிராய்
தாவிதின் வேர் கிளையாய்
கன்னியின் மைந்தனாய்
யூத ராஜ சிங்கம் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார்-உலக
இரட்சகர் பிறந்தார்

1.பாவத்தின் வேரை அறுத்திட
சாபத்தின் நுகத்தடி முறித்திட
மானிட உருவாய் அவதரித்தார்
இயேசு கிறிஸ்து வந்துதித்தார்

2.சரித்திரம் தனை பிரித்திட
நியாய பிரமாணம் நிறைவேற்றிட
தீர்க்கர் உரைத்தது நிறைவேற
நீதியின் சூரியன் வந்துதித்தார்

Leave a Comment