அடிங்கட மேளம் – Adingada Melam

Lyrics:அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு (அம்ஞ்சுருசு)எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே – அத ஆனந்தமா பாட போறோ(ம்) எங்க ஏசுவே ஏசுவே கள மேட்டு நாங்க மெட்டு கட்டி பாடும் பாட்டுஎங்க சந்தோஷத்த போட்டு நம்ம ஏசு சாமி பொறந்தத கேட்டு வழி தெரியாம கண் மூடி வாழ்ந்திருந்தோம்விழி திறக்காம பாத மாத்தி நடந்தோம் எங்க வாழ்க்கைய ரட்சிக்க வந்த என் ஏசுவே புது வெளிச்சத்த தந்த […]

அடிங்கட மேளம் – Adingada Melam Read More »

மார்கழி குளிரில் பிறந்த-Margali Kuliril pirantha

மார்கழி குளிரில் பிறந்த மன்னவரேமாந்தர்கள் போற்றும் தெய்வம் நீரே இருள் நீக்கும் ஜீவ ஒளியாய் வந்தவரே என் வாழ்வில் ஒளியை ஏற்றும் தீபம் நீரே இவரே என் மீட்பர் பிறந்தாரே இம் மண்ணில் பாடிட மனுவாய் உதித்தாரே 1. முட்களின் நடுவில் மலராய் காட்டு புஷ்பத்தின் நடுவில் லீலியாய் நேசர் எனக்காய் இன்று உதித்தார்-2 இவரே என் மீட்பர் பிறந்தாரே இம் மண்ணில் பாடிட மனுவாய் உதித்தாரே 2.ஏழ்மையை போக்கும் கருவியாய் எனக்காய் வந்தாரே தாழ்மையாய் வானோர்

மார்கழி குளிரில் பிறந்த-Margali Kuliril pirantha Read More »

பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே-Bethalagemiley MaattuThozhuvathilae

பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே பிறந்தாரே நம் இயேசு-2பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரேநம்மை மீட்டிடவே-2 1.தாவீதின் ஊரில்கிறிஸ்து என்னும் இரட்சகர்நமக்காய் பிறந்தாரேபயம் வேண்டாம்கலக்கம் வேண்டாம்எல்லாம் பார்த்துக்கொள்வார்-2 உன்னத தேவனுக்குமகிமை உண்டாகட்டும்பூமியிலே சமாதானமும்நன்மை உண்டாகட்டும்-2 Merry Christmas Merry Christmasஇயேசு பிறந்தார்நம்மை மீட்டிட பிறந்தார்-2 2.சுவிசேஷத்தை பிரசங்கித்திடஇயேசு வந்தாரேகுணமாக்கிடவும்விடுதலை தரவும்பரலோகம் விட்டு வந்தார்-2 இம்மானுவேல்தேவன் நம்மோடிருக்கின்றார்நித்திய நித்திய காலமாய்அவரே அரசாளுவார்-2-பெத்லகேமிலே Merry Christmas Merry Christmasஇயேசு பிறந்தார்நம்மை மீட்டிட பிறந்தார்-2

பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே-Bethalagemiley MaattuThozhuvathilae Read More »

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham

LYRICS:பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்ததுஉள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குதுபரலோக தந்தையின் செல்லம் வந்ததுமண்ணான என்னையும் தேடி வந்ததுஅகிலத்தைப் படைத்தவர் அணுவானதுஅறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2 எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜாகன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார் 1. எளியோனை நேசித்த மாமன்னவர்ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோஅறிஞரின் ஞானத்தை அவமாக்கியேபுல்லணை மீதினில் பிறந்தாரன்றோஉலகத்தின் பாவத்தை தாம் போக்கவேதேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம் 2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவேவிடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோமருளாலே கட்டுண்டோர்

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham Read More »

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu

Lyrics:மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே – கேளும்எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு 1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாருநிமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு பொன்னும் பொருளும் கேட்கலையேகாசு பணமும் கேட்கலையே -2 –இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு 2. பாவத்தை தீர்க்க வந்தாரு சாபத்தை முறிக்க பிறந்தாருநோய்களையெல்லாம் தீர்ப்பாரு நத்திய வாழ்வு தருவாரு பொன்னும் பொருளும் கேட்கலையே காசு பணமும் கேட்கலையே -2 –இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu Read More »

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு – Christmas christmas vanthachu

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சுநியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு-2பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும்மனசுக்குள் கொண்டாட்டம் வந்தாச்சு – எங்க Happy Happy Christmas Merry Merry ChristmasHappy Happy Christmas Merry Merry Christmas-2 1 ) எங்களைப் போல இயேசுவும் குழந்தை இயேசுவைத் போற்றி பாடுவோம் கவிதை – லாலா லாலா லா லா லா லா லாலா லாலா லா லா லா லா பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை இயேசுவைத் தவிர இன்பமில்லை – எங்கள்

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு – Christmas christmas vanthachu Read More »

மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven

மகிழ்ந்து பாடுவேன்துதித்துப் பாடுவேன் இயேசு எனக்காக பிறந்தார்..ஆஹாஹா..மண்ணுலகை மீட்கஎன்னையும் இரட்சிக்கதேவகுமாரனாய் பிறந்தார்இயேசு தேவ குமாரனாய் பிறந்தார் அவரே உன்னதர்சமாதான காரணர்மகிமை உடையவர் -2 1.பாவம் அறியாத தேவ குமாரனே பாவி எனக்காக பிறந்திட்டாரேஉலகத்தின் ஒளியாய் இயேசு வந்ததால்மனித வாழ்க்கையும் ஒளியானதே 2.ஏழை எனக்காக மகிமையான இயேசுவேஏழ்மைக் கோலமாக வந்திட்டாரேஎன்னிடம் நேசம் காட்டிடவேநேச குமாரன் பிறந்திட்டாரே

மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven Read More »

நாதன் அருளிய பெரும்-NATHAN ARULIYA PERUM

நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே – நாவினாலேபாடிப் போற்ற நாட்கள் போதுமோநல் பாதைதனில் தொடந்தென்னை நடத்தியதால் அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன்எண்ணில்லாத நன்மைகட்காய்அல்லேலூயா பாடிடுவேன் 1. இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால்சோதனையாம் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான்நிந்தை துன்ப துயர நேரங்களிலும்உம் நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் -அன்பின் 2. மேலோகத்தில் உம்மையல்லால் யாருண்டெனக்குபூலோகில் நீரல்லாது வேறாசையில்லையேஉம் ஆலோசனையின் படி என்னை நடத்திஉந்தன் மகிமையிலே ஏற்றுக்கொள்வீரே -அன்பின் 3. ஓட்டம்

நாதன் அருளிய பெரும்-NATHAN ARULIYA PERUM Read More »

முடியாததை முடியும் என்று – Mudiyaadhadhai Mudiyum Entru

முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரேஉனக்குள்ளே பல சாதனை செய்ய வந்தாரே – 2அந்த உத்தம புத்திரனை நீ பாடிக்கொண்டாடுநம்ம சத்தியர் பிறந்ததை நீ ஆடிக்கொண்டாடு – 2 உனக்கு குறித்ததை தரவந்த இயேசு வாழ்கவேமானிடத்தில் உயிர்தந்த இயேசு வாழ்கவே – 2(மானிடத்தை மீட்கவந்த இயேசு வாழ்கவே – 2) மனமகிழ்ச்சியை தரவந்த இயேசு வாழ்கவேஆறுதலைத் தரவந்த இயேசு வாழ்கவே – 2 தேவமைந்தன் புகழைப் பாடி ஆர்ப்பரிப்போமேதேவபாலன் பிறந்தநாளில் பாடிடுவோம் – 2

முடியாததை முடியும் என்று – Mudiyaadhadhai Mudiyum Entru Read More »

கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram

கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram கடுங்குளிரின் நேரம்நம் மன்னவன் பிறந்தாரே கன்னி மரியின் மடியில் நம் பாலன் பிறந்தாரே ஆரிரோ ஆராரீரோ வானிலே வெண்ணிலா ஆடிடுதே மேகமும் தொட்டிலாய் மாறிடுதே பூமகன் புன்னகை புரிந்ததால் பூமியின் பாவங்கள் அகன்றதே கண்ணே மணியே கண்ணுறங்கு இருள் அகலவே பிறந்தவர் மகிழ் கொண்டாடவே மலர்ந்தவர் சத்திய நாதனை பற்றிக்கொண்டால் நித்திய வாழ்வினை பெற்றுக்கொள்வாய் கண்ணே மணியே கண்ணுறங்கு

கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram Read More »

அறிவுக்கு எட்டாத அன்பு -Arivukku Ettadha Anbu

அறிவுக்கு எட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு அளந்திட முடியாத அன்பு என் இயேசுவின் அன்பு – 2பாவிக்காய் ஜீவனை இழந்த அன்பு பாரசிலுவையை சுமந்த அன்புஇது ஈடற்ற இணையற்ற இதயத்தின் அன்பு -2என் இயேசுவின் அன்பு மாறாத அன்பு மறவாத அன்பு தீராத அன்பு திகட்டாத அன்பு இது குறையாத அன்பு மறையாத அன்பு கடல் வற்றி போனாலும் வற்றாத அன்பு என் கர்த்தரின் பேரன்பு – அறிவுக்கு எட்டாத நிஜமான அன்பு நீடித்த அன்பு

அறிவுக்கு எட்டாத அன்பு -Arivukku Ettadha Anbu Read More »

மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar

மீட்பர் பிறந்துள்ளார் அவரே மேசியாமகிழ்ந்து பாடி ஆர்ப்பரிப்போம் -2 நம் மீட்பரும் அவரேநல் மேய்ப்பரும் அவரே-2இன்னிசை முழங்கிடகிறிஸ்மஸ் பிறந்ததே-மீட்பர் 1.ஆண்டவர் இயேசுஅன்பைத் தர வந்தார்மண் மீது தவழ்ந்திடமாடடையில் பிறந்தார்அருளைப் பொழிந்திடஅக இருளை அகற்றிடமானுடன் பாவத்தைபோக்கவே வந்தார்-2 மகிழ்வோம் புகழ்வோம்மண்ணோரின் இரட்சகரை-மீட்பர் 2.வாழ்வளிக்கும் வல்ல தேவன்வார்த்தையாக வந்தார்வையகம் எல்லாம் வாழ்த்தவிடியலாக வந்தார்உன்னதர் இயேசுஉலகிற்கு வந்தார்தந்தையின் அன்பைதரணிக்கு தந்தார்-2 மகிழ்வோம் புகழ்வோம்மண்ணோரின் இரட்சகரை-மீட்பர்

மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar Read More »