IRAIVA NE ORU SANGEETHAM – இறைவா நீ ஒரு சங்கீதம் song lyrics

இறைவா நீ ஒரு சங்கீதம் – அதில்
இணைந்தே பாடிடும் என் கீதம்
உன் கரம் தவழும் திருயாழிசை – அதில்
என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை

புல்லாங்குழலென தனித்திருந்தேன் – அதில்
இசையாய் என் மனம் புகுந்திடுவாய் – 2
பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் – புதுப்
பாடலால் என்னகம் இணைந்திடுமே
எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்
எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா
காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி
வாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா – 2

கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் – நீ
தோளினில் சுமந்தே வழிநடந்தாய் – 2
நாதா உன் வார்த்தைகள் வானமுதம் – 2 என்னை
நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம்
தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம்
தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம்
அருளாளன் நீயின்றி அழகேது என்னில்
அதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் – 2

https://www.youtube.com/watch?v=YbDPEBA_yj8

Leave a Comment