தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்
அவமானதோடு நெருக்கப்பட்டேன்-(2) ​
வாழ்ந்துகாட்டு என்றீர்
என்னை வாழவைத்து ரசித்தீர்
வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2)

பிரபுக்களின் ராஜாக்களின்
மத்தியில் என்னை உயர்த்தினீர்——(2)
சேற்றிலிருந்து என்னை தூக்கினீரே(2)
உயர்ந்து காட்டு என்றீர்
என்னை உயர வைத்து ரசித்தீர்
உயர்ந்து காட்டு என்றீர் -இயேசுவே——(2)

உதவாதவன் என்று ஒதுக்கினோர்
மத்தியில் பயன்படுத்துனீர்—–(2)
ஒன்றுமில்லாத என்னை உருவாக்கினீர்–(2)
தலை நிமிர்ந்து நில் என்றீர்
தலை நிமிர செய்து ரசித்தீர்
தலை நிமிர்ந்து நில் என்றீர் இயேசுவே——(2)

வாழ்ந்துகாட்டு என்றீர்
என்னை வாழவைத்து ரசித்தீர்
வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2)

Vazhndhu Kaattu official video|Vignesh|Jabaraj Abraham|Thirumoorthy|Tamil Motivation Christian Song|

Leave a Comment