வண்ண வண்ண கோலங்கள் வானிலே – Vanna Vanna Kolangal Vaanilae

பாடல் 18
வண்ண வண்ண கோலங்கள் வானிலே
சின்ன இயேசு பாலகன் மண்ணிலே
என்ன ஆனந்தம் என்ன பேரின்பம்
என்னை மீட்க இயேசு பிறந்தார்
1.மாலை மயங்கும் நேரம் மந்தை காட்டில் மேய்ப்பர்
வானதூதர் விண்ணில் தோன்றி பாடக் கேட்டாரே
மேய்ப்பரே மேய்ப்பரே கேளுங்கள்.
மேசியா மண்ணில் வந்தாரே
முன்னணையில் காணுங்கள் சின்னஞ்சிறு பாலனாய்
2.பெத்தலகேம் ஊரில் சத்திரத்தின் ஓரம்
மாடடையும் தொழுவினிலே பாலனைக்கண்டார்
மேசியா மேசியா கண்டோமே
மேலான பாக்கியம் பெற்றேன் .
பாலன் பாதம் பணிந்தாரே பாசத்தோடு மகிழ்ந்தாரே
3.எந்தன் பாவம் மீட்க என்னை சுத்தமாக்க
வானம் விட்டு பூமிவந்த இயேசு பாலனை
பாடுவேன் பாடுவேன் கொண்டாடுவேன்
பாரெல்லாம் உந்தன் நாமம் சொல்லுவேன்
என்னைத் தேடி வந்ததால்
என்னை மீட்டுக் கொண்டதால்

Leave a Comment