எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE

எழும்பிடு சீயோனே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்
தூசியை உதறி எழும்பிடு
தூய ஆவியால் இன்றே பறப்படு

இருள் பூமியை மூடினாலும்
கர்த்தர் உன்மேல் உதித்திடுவார்
காரிருள் ஜனங்களை மூடினாலும்
அவர் மகிமை உன்மேல் காணப்படும்

தீவுகள் உனக்காய் காத்திருக்க
துரிதமாய் நீயும் எழும்பிடு
தலைமுறைகள் அவர் பாதம்
சேர தாமதமின்றி புறப்படு

சுவிஷேசம் எங்கும் அறிவிக்கவே
ஆவியானவர் உன்மேலே கட்டுண்டவர்களை
உன்மேலே விடுவிக்கவே
கர்த்தர் உன்னை அபிஷேகித்தார்

Leave a Comment