Visuvasathalae Naamum Lyrics – விசுவாசத்தாலே நாமும்

Visuvasathalae Naamum Tamil Christian hits Song Lyrics, Written and Sung by Sis. Sarah Navaroji – விசுவாசத்தாலே நாமும்

விசுவாசத்தாலே நாமும் பிழைப்போம்
பசுமை செழிப்புடன் வாழ்வோம்
இயேசு தேவனை நம்பினோரே
விஸ்வாசத்தாலே நாமும் பிழைப்போம்

விஸ்வாசம் எம்மில் கடுகளவிருந்தால்
வீழ்த்திடுவோம் மலையைக் கடலிலே
உலகை ஜெயித்திடுமே விசுவாசம்
உத்தம இதயத்தில் தங்கும்

1. கர்த்தரைக் கண்டு விசுவாசிப்பதிலும்
காணாமல் நம்பினால் பாக்கியமே
தரிசித்தல்ல விசுவாசத்தாலே
தங்கி நம்மில் வசிக்கும் கர்த்தருக்குள்
பரிசுத்தாவியிலெ மகிழ்ந்து நாம்
பூரண மகிமை அடைவோம்

2. வீரர்களாக நின்றிடுவோமே
விசுவாச சோதனை நேர்ந்திடினும்
பொன்னைப் போல் நெருப்பில் புடமிட்டபோதும்
பொன்னாக நம் விசுவாசம் விளங்க
புகழ்ச்சி கனம் மகிமை கிடைக்குமே
பரமன் வெளிப்படும் நாளில்

3. ஆபிரகாமின் விசுவாச மார்க்கம்
அந்த அடிச்சுவட்டில் நடப்போர்
வாழ்வினில் நீதி கிறிஸ்துவின் மூலம்
வாக்குத்தத்த ஆசீர்வாத நன்மைகள்
ஜெயத்தின் மேல் ஜெயங்கொண்டு
பக்தர்கள் சந்ததம் சுதந்தரிப்போமே

4. தேவ குமாரன் வந்திடும் நாளில்
தூய விசுவாசத்தோடே பறப்போம்
மூலைக்கல் இயேசு திட அஸ்திபாரம்
மாளிகையாய் அவர் மேல் இணைந்து நாம்
பரம அழைப்புடன் சேர்ந்து சீயோனில்
பிதாவின் முகம் கண்டு வாழ்வோம்

Visuvasathalae Naamum Song Lyrics, விசுவாசத்தாலே நாமும் பாடல் வரிகள்

Visuvasathalae Naamum Lyrics in English

Visuvasathalae Naamum Pillaippom
Pasumai Sezhippudan Vaalvom
Yesu Devanai Nambinorae
Viswasathalae Naamum Pilaippom

Viswasam Emmil Kadukalavirunthaal
Veelththiduvom Malaiyai Kadalilae
Ulagai Jeyithidumae Visuvasam
Uththama Idhayththil Thangum

1.Kartharai Kandu Visuvasippathilum
Kaanamal nambinaal Bakkiyamae
Tharisiththalla Visuvasathalae
Thangi Nammil Vasikkum Kartharukkul
Parisuthaviyilae Magilnthu Naam
Pooranam Magimai Adaivom

2.Veerarkalaga Nintriduvomae
Visuvasa Sothanai Nernthidinum
Ponnai pol Neruppil Pudamitta Pothum
Ponnaga Nam Visuvasam Vilanga
Pugalchi Ganam Magimai Kidaikkumae
Paraman Velippadum Naalil

3.Abiragamin Visuvasa Maarkkam
Antha Adichuvattil Nadappor
Vaalvinil Neethi Kiristhuvin Moolam
Vaakkuthatha Aaseervatha Nanmaigal
Jeyaththin mel Jeyamkondu
Bakthargal Santhatham Suthantharippomae

4.Deva Kumaran Vanthidum Naalil
Thooya Visuvasthodae Parappom
Moolaikkal Yesu Thida Asthipaaram
Maaligaiyaai Avar Mel Inainthu Naam
Parama Alaippudan Searnthu Seeyonil
Pithavin Mugam Kandu Vaalvom

Sis. சாராள் நவரோஜி
R-Disco Hands T-110 D 2/4

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Visuvasathalae Naamum’ written and sung by Sis. Sarah Navaroji.
  • The song expresses themes of faith, perseverance, and spiritual strength, emphasizing reliance on Jesus.
  • The article includes an English translation of the song lyrics for broader understanding.
  • It also provides links to other Tamil Christian songs and devotionals published by World Tamil Christians.

Estimated reading time: 2 minutes